26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, October 15, 2015

NFPE 
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் 
தபால்காரர் மற்றும் பன்திறன் ஊழியர் 
தமிழ் மாநிலம், சென்னை - 600 005.

cwc/p4tn/-3                                                                                                            14.10.2015

மாநில செயற்குழு மற்றும் தொழிற்சங்க பயிலரங்கு: 

தோழர்களே1
நமது மாநில சங்க செயற்குழு கூட்டம் வருகிற 28.10.2015 தேதியிலும் 29.10.2015 அன்று தொழிற்சங்க சிறப்பு பயிலரங்கும் நடைபெற உள்ளது கூட்டம் சம்பந்தமான அறிவிப்புக்கடிதம் அனைத்து கோட்ட / கிளை செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பயிலரங்கு:
தொழிசங்க வகுப்பிற்கு ஒவ்வொரு கோட்ட / கிளைகளும் குறைந்த பட்சம் 5 தோழர்களையும், 100 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கோட்டங்கள் குறைந்த பட்சம் 10 தோழர்களையும், 200 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கோட்டங்கள் 15 தோழர்களுக்கு குறையாமல் பங்கெடுக்க அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கான தனி கட்டணம் ஏதும் இல்லை. தோழர்கள் இரண்டு நாட்களும் கலந்து கொள்வதிலும் தடை இல்லை. 

அகில இந்திய மாநாடு :
நமது அகில இந்திய மாநாடு 02.01.2016 முதல் 04.01.2016 வரை உஜ்ஜைனி நகர், மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து கோட்டங்களிலும் சார்பாளர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இளைய தலைமுறை சார்ந்த புதிய தோழர்களை பார்வையாளராக அதிகமான எண்ணிக்கையில் 
அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். 
மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய கோட்டா பாக்கியை உடனடியாக அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

உறுப்பினர் சேர்ப்பு படிவம் :
தற்போதைய உறுப்பினர் சேர்ப்பு படிவத்தை மாநில சங்கத்திற்கு அனுப்பிடாத கோட்டச் செயலாளர்கள் மாநில செயற்குழுவில் ஒப்படைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மாநில சங்க கோட்டா :
கடந்த ஏப்ரல் 2014 முதல் அக்டோபர் 2015 வரையிலான மாநில சங்க கோட்டா தொகையை மாநில செயற்குழுவில் முழுமையாக ஒப்படைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சில கோட்ட செயலாளர்கள் கோட்டா அனுப்பி உள்ளார்கள். அவர்கள் மீதமுள்ள மாதத்திற்கான தொகையை செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாநில சங்க வளர்ச்சி நிதி தாரீர்!!
தோழர்களே !
கடந்த அக்டோபர் 2014 ல் புதிய மாநில சங்க தலைமை பொறுப்பேற்ற பிறகு பல ஸ்தல மட்ட போராட்டங்களையும், இயக்கங்களையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இரண்டு மாநில செயற்குழு கூட்டங்களையும் நடத்தியுள்ளது. இதனால் மாநிலசங்கத்திற்கு நிதி நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. 

சென்ற செயற்குழுவில் கணினிக்காக தருவதாக சொன்ன 1000 ரூபாய் ஒருசில கோட்டங்களை தவிர மற்ற கோட்டங்கள் கொடுக்க வில்லை. 

ஆகவே, நமது மாநில சங்க சீரிய செயல்பாடு தடையில்லாமல் செல்ல மாநில சங்க வளர்ச்சி நிதியாக ஒவ்வொரு கோட்ட / கிளைகளும் ரூபாய் 1000 த்தை மாநில செயற்குழுவில் வழங்கிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

தோழமையுடன்,
G.கண்ணன் 
மாநில செயலாளர்.


No comments:

Post a Comment