26.03.2015 ONE DAY STRIKE News Flash

Sunday, October 23, 2016

NCA பேரவையின் சார்பாக நாகர்கோவில் நகரில் நடைபெறும் தோழர் N.பாலு அவர்களின் நினைவேந்தல் கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

பேரவைக்கும், பொதுச்செயலாளர்  தோழர் SK.ஜேக்கப்ராஜ் அவர்களுக்கும்  நான் அனுப்பிய மடல்...

                                                    23.10.2016
NCA பேரவையின் பொதுச் செயலாளர் அன்புத் தோழர் SK ஜேக்கப்ராஜ் அவர்களுக்கு, NFPE - P4 மாநில செயலாளர் G.கண்ணனின் பதிவு.

உடல்நிலை சரியில்லாததின் காரணமாக தோழர் N.பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் தனக்கென  முத்திரை பதித்த தோழர் N.பாலு அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்விடம்,
                எதிர்காலத்தில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராட்டப் பாதையில், "ஒற்றுமை என்ற முரசு" ஓங்கி ஒலிக்கும் களமாக, அஞ்சல் ஊழியர் போர்ப்படையின் தளத்தை விரிவுபடுத்தும் பாசறையாக உருவெடுக்க வேண்டும் என்ற என் பதிவை,
         அஞ்சா நெஞ்சன் என பெயர் தாங்கி, இரும்பு இதயம் கொண்ட முரட்டுத் தோழன் N.பாலு அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

            இந்நாளில் அவரிடம் என்னைக் கவர்ந்த சில விசயங்களை பதிவு செய்ய கடமையுடையேன்.

              தோழர் பாலு அவர்களின்,
அஞ்சாமை, வீரம், பிரச்சனைகளை அதிகாரவர்க்கத்திடம் எகிரித்தகர்க்கும் பாங்கு, அதிகாரிகளை அதிரவைக்கும் தொழிலாளிவர்க்கத் திமிர், இத்தனையும் தாண்டி முத்தாய்ப்பாய்,
போராட்டங்கள், மாநாடுகள், அணி பிரச்சனைகள் வரை  எந்த நிகழ்வானாலும் மேடைகளில் அமராமல்,
              "ஊழியரோடு ஊழியராய் கீழே கலந்து பின்னி பினைந்துவிடும் அடிமட்ட வரையிலான ஊழியர் உணர்வு"  இவையனைத்தும் நிகழ்கால எதிர்கால தொழிற்சங்கவாதிகளும், தற்பொழுது பணிக்கு வந்த இளைஞர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்.

                   இறுதியாக,
தோழர் பாலு அவர்களுடன்  கருத்து வேறுபாடு உள்ள அணிகள், தலைமைகள். தலைவர்கள், ஊழியர்கள் இருந்தாலும் , ஆயிரம் முரன்பாடுகள் இருந்தாலும்,
                 "அஞ்சல் ஊழியருக்கான சேவையில், அவர் தம் குடும்பத்தையும் புறம் தள்ளி தன் வாழ்நாள் முழுமையும் அர்ப்பணித்தார்" என்ற உண்மையை உணர்ந்து நாமும்,
"தொழிலாளி வர்க்க உரிமைக்காக முழுமையாக அர்ப்பணிக்க சபதமேற்ப்போம்.
தோழமையுடன்,
உங்கள் கண்ணன்.

No comments:

Post a Comment