26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, October 28, 2016

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

தீபாவளிக்கு ஆயிரம் கதைகள் சொன்னாலும், குறிப்பாக கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களின் குடும்பங்களில் சிறுவர்களுக்கு  தீபாவளி என்றால் முதலில் ஞாபகம் வருவது    டவுசர் சட்டை, பாவாடை சட்டை (தாவணியும்) தான்.

ஏனென்றால் அடுத்த வருட தீபாவளி வரை அதுதான். அதனால்தான் டவுசருக்குப்பின்னால் தபால்பெட்டியை நிறைய மாணவர்கள் வைத்திருந்தார்கள். ஆகவே தான் எதனால் தீபாவளி வந்தது என்பதை விட எப்பொழுது வரும் என காத்திருந்தார்கள்.

அதுமட்டுமல்ல,
இட்லி, வடை, சுசியம், சீடை, முறுக்கு போன்ற பண்டங்களை ஆசைதீர சாப்பிடுவதும் அன்றுதான். சீடை, முறுக்கு யை நிறைய செய்து பானையில் போட்டு வீட்டின் மேல் கட்டி விட்டு நாட்கணக்கில் உபயோகிக்கும் நாளும் தீபாவளிதான்.

இப்படி ஏழைகளின் கனவு நாள், தீபாவளி...
அந்த மக்களின் மகிழ்ச்சிக்காக..

(நாங்களும் எங்கள் குடும்பத்தில் இக்கனவை, ஆண்டுக்கு இரண்டு உடைகளை பெற்றுள்ளோம்.)

வாழ்த்துக்கள்..தீபாவளி வாழ்த்துக்கள்.
G.கண்ணன்,
மாநில செயலாளர்.

No comments:

Post a Comment