26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, August 25, 2016

தி.நகர் தலைமை அஞ்சல் அதிகாரியின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம். 24.8.2016 மதியம் 1.00 மணி முதல் நடை பெற்றது. NFPE, FNPO வை சார்ந்த அஞ்சல் மூன்று,நான்கு GDS
ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

CL கேட்டாள் EL கொடுப்பது, இல்லையானால் விடுப்பே கொடுப்பதில்லை.

ஒரு பெண் தோழியர் தன் அம்மாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி விடுப்பு கேட்டால் மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாத இந்த பெண் அதிகாரி விடுப்பு கொடுக்க மறுத்து விட்டார். இறுதியில் அந்த பெண் ஊழியரின் அம்மா இறந்தே விட்டார். கடைசியாக தாயிடம் பேச முடியாமல் உடலை மட்டும் பார்த்து வந்தார்.
இப்படிப்பட்ட  இரக்கமே இல்லாத அதிகார வெறிபிடித்த அகங்காரம் தலைக்கேரிய அதிகார வர்க்கத்தை தூக்கி எரிவோம்...

Monday, August 22, 2016

LGO தேர்வு முடிவுகளை உடனே வெளியிட கோரி CPMG அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION
Postmen & MTS
Tamil Nadu Circle, Roypattah, Chennai – 600 014
 Chennai – 600 014
To  Dated – 20.08.2016
 The CPMG,
 TamilNadu Circle,
 Chennai – 600002.

 Sir,
Sub:  Expedite the release of LGO Exam result – Reg

              It is brought to the notice of our union about the inordinate delay in releasing the LGO exam results in Tamil Nadu circle.
 
 Our staff are very much anxious and keen to know the result.

 We are informed that the results of the LGO exam have already been released in many circles

 There was similar delay in releasing LGO exam results in previous years also.

 Therefore we request circle administration to expedite the process of LGO Exam results without further delay.

Thanking You

Yours faithfully
 G. Kannan
 Circle Secretary
 AIPEU- P4
 Tamil Nadu circle.
தோழியர் RK.நாகஜோதி அஞ்சல் அதிகாரி அவர்களுக்கு நன்றி..

மேட்டுப்பாளையம் கிளை மாநாட்டில் நமது மாநில மாநாட்டிற்கு நன்கொடை ரூபாய் 500
யை தோழியர் RK.நாகஜோதி HPM அவர்கள் மாநில செயலாளரிடம் வழங்கினார்.

மாநாட்டிற்கான முதல் நன்கொடை இது.
மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.

Sunday, August 21, 2016

அஞ்சல் நான்கின் மேட்டுப்பாளையம் கிளை மாநாடு மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலகத்தில் கிளை தலைவர் தோழர் V.முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக சங்க கொடியை மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
கிளை தலைவர் : தோழர் V.முருகேசன் தபால்காரர் மேட்டுப்பாளையம்.

கிளை செயலாளர்: M.பாலசுப்பிரமணி தபால்காரர் மேட்டுப்பாளையம்.

பொருளாளர்: E.சின்னதுரை தபால்காரர் மேட்டுப்பாளையம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.


Friday, August 5, 2016

தமிழ் மாநில மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புகுழு
எண்: 1/8/2016  தேதி: 3.8.2016
செப்டம்பர்-2 வேலைநிறுத்தத்தை ஆதரிப்போம்!
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சம்மேளனங்கள், மகாசம்மேளனங்கள், மாநில அரசு ஊழியர் சம்மேளனம், வங்கிகள், இன்ஷ்யுரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் கூட்டாக செப்டம்பர்-2 அன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இரண்டாண்டுக்கும்  மேற்பட்ட நரேந்திரசிங் மோடி தலைமையிலான மத்திய NDA அரசு பின்பற்றி வரும் உலகமய – தாராளமய – தனியார் மயக் கொள்கைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது. நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வதும், மாறாக காண்ட்ராக்ட் உள்ளிட்ட உரிமைகளற்ற அத்துக்கூலி முறைகள் அதிகரித்துக் கொண்டே வருவதும் தான் அரசுத் துறை, பொதுத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் இன்றைய கதி. குறைந்த பட்ச ஊதியப் பாதுகாப்பும் இல்லாமல் கோடிக்கணக்கான அமைப்பு சாரா ஊழியர்கள் கடும் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அரசுத் துறை, பொதுத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் கூட தனியாருக்கு பங்குகள் விற்கப்பட்டு தனியார் ஆதிக்கத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. அனைத்து மட்டங்களிலும் PPP என்ற பெயரில் தனியார் பொதுத்துறை கூட்டு ஏற்பாடுகள் என்ற போர்வையிலும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகிவருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பணியாற்றி வரும் நிரந்தரத் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளும், தொழிலாளர் நல ஏற்பாடுகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கம் வைக்கும் தலைவர்களும் முன்னணி ஊழியர்களும் பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
தாக்குதலின் வேகம் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் மீதும் பாய்ந்துள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைப்படியாக முதலீடு செய்யப்படுவது கூட கண்காணிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவே சுட்டிக்காட்டியுள்ளது. இறந்து போன ஏராளமான புதிய பென்ஷன் திட்டம் சார்ந்த ஊழியர்களின் குடும்பங்கள் பென்ஷன் எதுவுமின்றியும், சமூகப் பாதுகாப்பே இல்லாததால் தெருக்களில் வாடும் நிலையும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிலைமைகள் அனைத்தையும் பரிசீலித்த மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து சம்மேளனங்கள், சங்கங்களின் புதுடில்லி தேசிய மாநாடு, மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படையான கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்ததுடன், நாடு தழுவிய இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் அறைகூவல் விடுத்தது. உச்சகட்டமாக செப்டம்பர்-2 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளது.
தமிழ் மாநில மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர்-2 வேலைநிறுத்தத்திற்கு  முழு ஆதரவைத் தெரிவிக்கின்றது. அத்துடன் செப்டம்பர்-2 அன்று முற்பகலில் தலைநகர் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பல்வேறு ஓய்வூதியர் அமைப்புகளின் சார்பில் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராடும் தொழிலாளி வர்க்கத்திற்கு நம் ஆதரவைத் தெரிவிப்பதென்ற முடிவினையும் ஒருங்கிணைப்புக் குழு எடுத்துள்ளது. மிக சக்தியாகவும் வெற்றிகரமாகவும் மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டங்களை செப்டம்பர்-2 அன்று காலையில் நடத்துமாறு தமிழ் மாநில ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து ஓய்வூதியர் அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
N.L.ஸ்ரீதரன்  அ.சுந்தரம்
     தலைவர் பொதுச்செயலர்

Monday, August 1, 2016

NFPE-P4
அகில இந்திய அஞ்சல் ஊழியர் நான்காம் பிரிவு தமிழ் மாநில சங்கத்தின், சென்னை பெருநகர மண்டல கோட்ட கிளை செயலாளர்கள் கூட்டம் 31.7.2016 காலை 11 மணி அளவில் பூங்காநகர் அஞ்சலகத்தில் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் மண்டல செயலாளர் தோழர் S.ஜோதிமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நமது முதுபெரும் தலைவர் அண்ணன் ஏஜிபி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். மற்றும் நமது அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர் P.திருமகன் அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

பொருள்;
1. மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக..
2. அகில இந்திய செயற்குழு கூட்டம் தமிழகத்தில் நடத்துவது தொடர்பாக...
3. மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் மாநில, அகில இந்திய மாநாடுகள் நடத்துவது தொடர்பாக...

கலந்து கொண்ட மாநில சங்க நிர்வாகிகள்:
1. தோழர் M.பன்னீர்செல்வம், மாநில தலைவர்,
2.தோழர் M.நடராஜன், மாநில உதவி தலைவர்,
3. தோழர் G.கண்ணன், மாநில செயலாளர்,
4. தோழர் S.ஜோதிமணி, மாநில துணை செயலாளர்,
5. தோழர் G.சுரேஷ்பாபு, மாநில உதவி செயலாளர்,
6. தோழர் S.ரவிச்சந்திரன், மாநில பொருளாளர்,
7. தோழர் R.பரமானந்தம், மாநில உதவிபொருளாளர்,
8. தோழர் S.வாசுதேவன் மாநில தனிக்கையாளர்.

கலந்து கொண்ட கோட்ட செயலாளர்கள்:
1. தோழர் S.வேதகிரி, சென்னை வடகோட்டம்,
2. தோழர் A.பெருமாள், வேலூர்,
3. தோழர் T.மகேந்திரன், காஞ்சிபுரம்,
4. தோழர் J.புருஷோத்தமன், சென்னை GPO,
5. தோழர் V.சந்தானம், சென்னை அயல் நாட்டஞ்சல்,
6. தோழர் M.நாராயணன், சென்னை மத்திய கோட்டம்(பொருப்பு)
7. தோழர் N.செல்வராஜ், தென் சென்னை கோட்டம்(பொருப்பு)
8. தோழர் P.பிரசன்னா வெங்கடேஷ், தாம்பரம் கோட்டம்(பொருப்பு)
9. தோழர் M.பன்னீர்செல்வம், பாண்டிச்சேரி.

வர இயலாத கோட்ட கிளைகள்:
கோட்டங்கள் நான்கு (4),
கிளைகள் இரண்டு(2).

இதே தேதியில் Postman to PA LGO தேர்வு நடைபெற்றதால், தேர்வில் கலந்து கொண்ட காரணத்தினால் கூட்டத்தில் பங்கெடுக்க முடியாமல் போன கோட்ட /கிளை செயலாளர்கள்,
1.தோழர் R.சீனிவாசன், திருவண்ணாமலை,
2. தோழர் N.தனஞ்செயன், அரக்கோணம்,
3. தோழர் காசி, ஆரணி கிளை.

முடிவுகள்:
* அகில இந்திய செயற்குழு கூட்டம்  26,27 -12 - 2016 ஆகிய தேதிகளில், திண்டிவனம் நகரில் நடத்துவது.

* நமது மாநில செயற்குழு கூட்டம் 28.12.2016 அன்று திண்டிவனம் நகரில் நடத்துவது.

* நமது மாநில மாநாடு 29.12.2016 மற்றும் 30.12.2016 ஆகிய இரண்டு நாட்கள் திண்டிவனம் நகரில் நடத்துவது.

* மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநாட்டு நன்கொடை தொகையை இதுவரை கொடுக்காதவர்கள் வருகிற 4.8.2016 தேதிக்குள் கோட்ட செயலாளர்கள் மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்.

* சார்பாளர் மற்றும் பார்வையாளர் கட்டணம் ரூபாய் ஆயிரம் (1000).

* மாநாடு மற்றும் அகில இந்திய செயற்குழு நடத்துவதற்காக நன்கொடை புத்தகங்கள் அச்சடிப்பது.

* மாநிலத்தில் அனைத்துக் கோட்டங்களும் வசூல் செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூபாய் 500 வீதம் அந்தந்த கோட்ட கிளை செயலாளர்கள்
பொறுப்பெடுத்து அக்டோபர் இறுதிக்குள் மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்.
(நன்கொடை பத்தகங்கள் 20.8.16 தேதிக்குள்
அனுப்பி வைக்கப்படும்)

* சார்பாளர் மற்றும் பார்வையாளர் கட்டணம் செலுத்தும் அனைவருக்கும் நமது சங்க முத்திரை வரைந்த டிசர்ட் மற்றும் தொப்பி வழங்கிட வேண்டும்.
(இந்த பொறுப்பை இப்பொழுதே உடனடியாக ஏற்றுக் கொண்டு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த மாநில அமைப்பு செயலாளரும், திருப்பூர் கோட்ட செயலாளருமான தோழர் V.தர்மலிங்கம் அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்)

அருமை தோழர்களே,
நமக்கு மாநில சங்கம் ஒப்படைத்திற்கும் இக்களப்பணிகளை விரைந்து முடிப்போம்.
நம்மால் முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை என்ற இருமாப்போடு களமிறங்குவோம் என் இதய தோழனே!!
G.கண்ணன்,
மாநில செயலாளர்.