26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, June 30, 2016

NFPE அஞ்சல் நான்கு மத்திய செயற்குழு கூட்டம் 
26.6.16 மற்றும் 27.6.16 இரண்டு நாட்கள் Jasidih நகர் J
harkanth மாநிலத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
கூட்டத்தில் தமிழகம் சார்பில் அகில இந்திய உதவி 
பொது செயலாளர் தோழர் P.திருமகன் அவர்களும், ]
தமிழ் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் 
அவர்களும் கலந்து கொண்டனர்.

26.06.2016.
முதல் நாள் நிகழ்ச்சி காலை கொடியேற்றத்துடன் 
துவங்கியது. தேசிய கொடியை முன்னாள் P4 
பொதுச் செயலாளர் தோழர் தேஷ்ராஜ் சர்மா 
அவர்களும், சம்மேளன கொடியை மத்திய அரசு 
ஊழியர் மகாசம்மேளனத்தின் பொது செயலாளர் 
தோழர் M.கிருஷ்ணன் அவர்களும், சங்க கொடியை 
அகில இந்திய தலைவர் தோழர் பாலகிருஷ்ண 
சாக்லே அவர்களும் ஏற்றி வைத்தனர்.
பின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொது அரங்கம்.
கலை நிகழ்ச்சியுடன் பொது அரங்கு ஆரம்பமானது. 
தோழர் M.கிருஷ்ணன் அவர்கள் துவக்கவுரை 
நிகழ்த்தினார்.
பின்பு ஜார்கண்ட் PMG அவர்களும் SSP அவர்களும் 
வாழ்த்தி பேசினர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் 
வேலையறிக்கையை பொது செயலாளர் தோழர் 
R.சீத்தாலெட்சுமி அவர்கள் சமர்பித்தார்கள். 
அறிவித்த அஜந்தாக்களின் மீதும், 
வேலையறிக்கையின் மீதும் மாநில செயலாளர்கள் 
விவாதம் தொடர்ந்தது. மாலை 7.30 மணியளவில் 
இரவு உணவு இடைவேளைக்காக கூட்டம் ஒத்தி 
வைக்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

27.06.2016.மீண்டும் காலை மாநில செயலாளர்களின் விவாதம் 
தொடர்ந்தது. தமிழகத்தின் சார்பில் மாநில 
செயலாளர் தோழர் G.கண்ணன் விவாதத்தில் பங்கு 
கொண்டார். கீழ்க்கண்ட விசயங்களை பகிர்ந்து 
கொண்டார்.

* நமது மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட 
தீர்மானங்கள், 11.7.16 வேலைநிறுத்தம், Membership 
verification, GDS NFPE உறுப்பினர் சேர்ப்பு, casual labour 
union formation division level,

* பொதுச்செயலாளர் வேண்டுகோளை ஏற்றுஅடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தை தமிழகத்தில் 
நடத்துவது என தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக 
அறிவிக்கப்பட்டது.
* Post Men Cadre Restructure தொடர்பாக தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட Proposal முன் வைக்கப் பட்டது.
1st promotion,
Stg PM and Head Post Men - HSG-1
2nd promotion,
Cash Overseers and Mail Overseers - HSG-2
ஆக பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.
மற்றும் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பின் மத்திய சங்க நிர்வாகிகள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். நமது மாநிலத்தில் இருந்து உதவி பொதுச் செயலாளர் தோழர் P.திருமகன் உரையாற்றினார். கீழ்க்கண்ட பொருள்களின் மீது விவதித்தார்.
* அறிக்கையின் மீது விவாதத்தை மாநில செயலாளர்கள் இன்னும் செழுமைப்படுத்தியிருக்க வேண்டும்.
* 11.7.2016 வேலை நிறுத்தம் 100℅ வெற்றி பெற மாநில செயலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* GDS NFPE சங்கத்திற்கும், அஞ்சல் நான்கு சங்கத்திற்கும் தொப்புள்கொடி உறவு உள்ளதால் நாம் முன்னின்று சகோதர அமைப்புகளோடு இணைந்து AIPEU GDS சங்கத்திற்கு உறுப்பினர் சேர்ப்பை நடத்திட வேண்டும்.
* Cadre Restructure விசயத்தில் MTS தோழர்களுக்கும் seniority அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
* வேலூர் கோட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனையான, வேலூர் கோட்டை அஞ்சலகத்திலிருந்து பட்டுவாடா பிரிவை தற்காலிகமாக வேலூர் HO விற்கு மாற்றம் செய்யப்பட்டது. பட்டுவாடா பிரிவை மீண்டும் வேலூர் கோட்டை அஞ்சலகத்திற்கே மாற்றிட அகில இந்திய சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்பு R3 பொதுச் செயலாளர் தோழர் கிரிராஜ் சிங் அவர்கள் வாழ்த்தி பேசினார்.
இறுதியாக, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர்
M.கிருஷ்ணன் அவர்கள்,
"வேலைநிறுத்தம் உறுதி"
"தயாராகுங்கள் தோழர்களே"
என முடித்தார். மாலை 5.30 மணி அளவில் கூட்டம் முடிந்தது.
G.கண்ணன்,
மாநில செயலாளர்.

NFPE அஞ்சல் நான்கு தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஜுன் 10,11 2016 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.
மாநில சங்க நிர்வாகிகள் 18 பேரில் 16 பேர்களும், கோட்ட செயலாளர்கள் 49 பேரில் 43 பேர்களும், கிளை செயலாளர்கள் 20 பேரில் 10 பேரும், பார்வையாளர்களாக சுமார் 150 பேர்களும் கலந்து கொண்டனர்.
செயற்குழுவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அஞ்சல் நான்கின் முதுபெரும் தலைவரும், 37 ஆண்டுகள் மாநில செயலாளராக பணியாற்றியவருமான தோழர் AGP அவர்களும், நமது அகிலஇந்திய சங்கத்தின் உதவி செயலாளர் தோழர் P.திருமகன் அவர்களும், அஞ்சல் நான்கு முன்னாள் துணைமாநில செயலாளர் தோழர் D.கல்யாணராமன் அவர்களும், முன்னாள் மாநில தலைவர் தோழர் G.கிருஷ்ணன் அவர்களும், முன்னாள் P3 மாநில தலைவர் தோழர் ஶ்ரீவி அவர்களும், கேசுவல் லேபர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் D.சிவகுருநாதன் அவர்களும், முன்னாள் RJCM உறுப்பினர் தோழர் S.கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டனர்.
10.06.16 அன்று காலை சரியாக 11.00 மணிக்கு சம்மேளன கொடியை தோழர் D.கல்யாணராமன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தென்மண்டல செயலாளர் தோழர் SB.ராஜமோகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
காலை முதல் மதியம் 2.30 மணிவரை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் உரையாற்றினர். மாலை 4.00 மணிக்கு மீண்டும் செயற்குழு துவங்கியது. மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை சமர்பித்தார். மாநில பொருளாளர் தோழர் S.ரவிச்சந்திரன் அவர்கள் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாலை சரியாக 5.30 மணிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
11.6.16 காலை மீண்டும் சரியாக 10.00 மணிக்கு அவை கூடியது. வேலையறிக்கை மற்றும் அஜந்தாக்களின் மீதான விவாதத்தை மாநில துணை செயலாளர் தோழர் S.ஜோதிமணி அவர்கள் துவக்கி வைத்தார். பின்பு ஓரிரு கோட்ட செயலாளர்கள் தவிர அனைவரும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
தோழர் ஶ்ரீவி அவர்கள் மாநில சங்க செயல்பாட்டை பாராட்டி தோழர்கள் AGP, மாநில தலைவர் M.பன்னீர்செல்வம், மாநில செயலாளர் G.கண்ணன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இறுதியாக மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். தோழர் M.ராஜேந்திரன் தூத்துக்குடி கோட்ட செயலாளர் அவர்கள் நன்றி கூறினார். கூட்டம் இனிதே முடிந்தது.
அனைத்து கோட்ட கிளை செயலாளர் களுக்கும் நினைவு பரிசாக bag வழங்கப்பட்டது.
மத்திய அரசு மகா சம்மேளன அகில இந்திய மாநாட்டிற்கான நன்கொடை புத்தகங்கள் அனைத்து கோட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்ட து.
G.கண்ணன்
மாநில செயலாளர்.

Saturday, June 18, 2016

அஞ்சல் மூன்று நடத்திய அருமை 

மிகு தர்ணா...17.6.2016.

தமிழகம் முழுவதிலிருந்தும் உணர்வுபூர்வமாக 
கலந்து கொண்ட பல கோட்டங்கள்...

துவக்க உரை ஆற்றிய அருமைத் தோழர் KR..

பசி நேரத்தில் செவிக்குணவளித்த அன்புத் தோழர் 
KVS...

வீரவுரை வீசிய NFPE GDS மாநில செயலர் அன்புத்  

தோழர் தன்ராஜ்..

கோபவுரை யெரிந்த கோட்ட கிளை 
செயல்வீரர்கள்...

பெண் தோழர்கள் ஆற்றிய ஆவேச 
உரை..தோழர்கள் ஏஞ்சல் சத்தியநாதன் , 
மணிமேகலை..

இவை யனைத்தையும் மீறி இப்போராட்டத்தின் 
எழுச்சி...வடசென்னை கோட்ட தோழர்களின் 
பங்களிப்பும், அதில் மகளிரின் பங்கு ..
வடகோட்ட தோழர்களால், நிர்வாகத்திற்கு சூடு 
வைத்த தட்டிகள் ...

போராட்ட ஏற்பாடுகள் செய்த மாநில தலைவர் 
தோழர் P.மோகன் மற்றும் மாநில செயலாளர் 
தோழர் JR அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள். 

அஞ்சல் நான்கு அழைப்பை ஏற்று கலந்து கொண்ட 
P4 தோழர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். 
நிறைவுரையாற்ற சந்தர்ப்பம் வழங்கிய 
தலைமைக்கு நன்றி.

G.கண்ணன்,
மாநில செயலாளர்.

NFPE

17.6.2016 தோழர் ஆதி நினைவு நாள்..

போராளியே!! உன் நினைவு நாளில்  இந்தியா 

முழுவதும் அனைத்து மாநில தலைநகரிலும் 

தர்ணா போர்..

இதை விட எங்கள் போராளிக்கு அஞ்சலி ஏது..

நாம் அஞ்சலியை தர்ணாவிலே...

வீர வணக்கம் தோழர் ஆதிக்கு...

Friday, June 17, 2016

NFPE - P4

சென்னை நகர மண்டல அஞ்சல் நான்கு தோழர்கள் 
கவனத்திற்கு!!

17.6.2016 ல் அஞ்சல் மூன்று அறைகூவல் படி 

நடைபெற உள்ள தர்ணாவிற்கு சென்னை சார்ந்த 

அனைத்து தபால்காரர்களும் பணிமுடித்து சரியாக 

3.00 மணிக்கு CPMG அலுவலகம் முன் வருமாறு 

பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.

Thursday, June 16, 2016

NFPE - COC

NFPE P3 அகில இந்திய சங்கத்தின் அறைகூவல்..

17.6.2016 அன்று CPMG அலுவலகம் முன் 

முழு நாள் தர்ணா..

அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு 

தரவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

NFPE இணைப்பு குழுவின் அனைத்து அஞ்சல் RMS 

சங்கங்களின் சார்பாக அலைகடலென 

அணிதிரண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

B.பரந்தாமன்.                               G.கண்ணன்

தலைவர்.                                       கன்வீனர்.

NFPE - COC.

Wednesday, June 15, 2016

RMS NFPE - FNPO JCA சார்பில் மாநில அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து இன்று 14.06.16 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

NFPE அஞ்சல் நான்கு தமிழ் மாநில சங்கத்தின் 

மாநில செயற்குழு கூட்டம் ஜுன் 10,11 2016 

ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் நகரில் 

வெற்றிகரமாக நடைபெற்றது.

மாநில சங்க நிர்வாகிகள் 18 பேரில் 16 பேர்களும், கோட்ட செயலாளர்கள் 49 பேரில் 43 பேர்களும், கிளை செயலாளர்கள் 20 பேரில் 10 பேரும், பார்வையாளர்களாக சுமார் 150 பேர்களும் கலந்து கொண்டனர்.
செயற்குழுவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அஞ்சல் நான்கின் முதுபெரும் தலைவரும், 37 ஆண்டுகள் மாநில செயலாளராக பணியாற்றியவருமான தோழர் AGP அவர்களும், நமது அகிலஇந்திய சங்கத்தின் உதவி செயலாளர் தோழர் P.திருமகன் அவர்களும், அஞ்சல் நான்கு முன்னாள் துணைமாநில செயலாளர் தோழர் D.கல்யாணராமன் அவர்களும், முன்னாள் மாநில தலைவர் தோழர் G.கிருஷ்ணன் அவர்களும், முன்னாள் P3 மாநில தலைவர் தோழர் ஶ்ரீவி அவர்களும், கேசுவல் லேபர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் D.சிவகுருநாதன் அவர்களும், முன்னாள் RJCM உறுப்பினர் தோழர் S.கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டனர்.
10.06.16 அன்று காலை சரியாக 11.00 மணிக்கு சம்மேளன கொடியை தோழர் D.கல்யாணராமன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தென்மண்டல செயலாளர் தோழர் SB.ராஜமோகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
காலை முதல் மதியம் 2.30 மணிவரை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் உரையாற்றினர். மாலை 4.00 மணிக்கு மீண்டும் செயற்குழு துவங்கியது. மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை சமர்பித்தார். மாநில பொருளாளர் தோழர் S.ரவிச்சந்திரன் அவர்கள் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாலை சரியாக 5.30 மணிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
11.6.16 காலை மீண்டும் சரியாக 10.00 மணிக்கு அவை கூடியது. வேலையறிக்கை மற்றும் அஜந்தாக்களின் மீதான விவாதத்தை மாநில துணை செயலாளர் தோழர் S.ஜோதிமணி அவர்கள் துவக்கி வைத்தார். பின்பு ஓரிரு கோட்ட செயலாளர்கள் தவிர அனைவரும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
தோழர் ஶ்ரீவி அவர்கள் மாநில சங்க செயல்பாட்டை பாராட்டி தோழர்கள் AGP, மாநில தலைவர் M.பன்னீர்செல்வம், மாநில செயலாளர் G.கண்ணன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இறுதியாக மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். தோழர் M.ராஜேந்திரன் தூத்துக்குடி கோட்ட செயலாளர் அவர்கள் நன்றி கூறினார். 
கூட்டம் இனிதே முடிந்தது.
அனைத்து கோட்ட கிளை செயலாளர் களுக்கும் நினைவு பரிசாக bag வழங்கப்பட்டது.
மத்திய அரசு மகா சம்மேளன அகில இந்திய மாநாட்டிற்கான நன்கொடை புத்தகங்கள் அனைத்து கோட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்ட து.
G.கண்ணன்
மாநில செயலாளர்.

Tuesday, June 14, 2016

SEMINAR ON " SEVENTH PAY COMMISSION RECOMMENDATIONS AND ITS IMPACT ON WORKING CLASS”

A Seminar on the above subject was organised at Bhubaneswar (Odisha) on 12th June 2016 in connection with the CITU All India Conference to be held at Puri in November 2016. Employees of Central and State Govt, Public sector workers and other section of working class participated in the seminar. Com Mohini Mohan Samal (Confederation) presided. Com M. Krishnan, Secretary General, Confederation delivered the key note address. Com Lambodar Nayak, State President, CITU, Com Dusmant Kumar Das, Convenor, Odisha Sramik Karmachari Ekta Manch, Com Nirmal Das, Secretary, All India State Govt Employees Federation (AISGEF) and Com R. N. Dhal, General Secretary, Confederation of Central Government Employees & Workers, Odisha State Committee addressed the seminar.