26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, June 30, 2016

NFPE அஞ்சல் நான்கு மத்திய செயற்குழு கூட்டம் 
26.6.16 மற்றும் 27.6.16 இரண்டு நாட்கள் Jasidih நகர் J
harkanth மாநிலத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
கூட்டத்தில் தமிழகம் சார்பில் அகில இந்திய உதவி 
பொது செயலாளர் தோழர் P.திருமகன் அவர்களும், ]
தமிழ் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் 
அவர்களும் கலந்து கொண்டனர்.

26.06.2016.
முதல் நாள் நிகழ்ச்சி காலை கொடியேற்றத்துடன் 
துவங்கியது. தேசிய கொடியை முன்னாள் P4 
பொதுச் செயலாளர் தோழர் தேஷ்ராஜ் சர்மா 
அவர்களும், சம்மேளன கொடியை மத்திய அரசு 
ஊழியர் மகாசம்மேளனத்தின் பொது செயலாளர் 
தோழர் M.கிருஷ்ணன் அவர்களும், சங்க கொடியை 
அகில இந்திய தலைவர் தோழர் பாலகிருஷ்ண 
சாக்லே அவர்களும் ஏற்றி வைத்தனர்.
பின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொது அரங்கம்.
கலை நிகழ்ச்சியுடன் பொது அரங்கு ஆரம்பமானது. 
தோழர் M.கிருஷ்ணன் அவர்கள் துவக்கவுரை 
நிகழ்த்தினார்.
பின்பு ஜார்கண்ட் PMG அவர்களும் SSP அவர்களும் 
வாழ்த்தி பேசினர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் 
வேலையறிக்கையை பொது செயலாளர் தோழர் 
R.சீத்தாலெட்சுமி அவர்கள் சமர்பித்தார்கள். 
அறிவித்த அஜந்தாக்களின் மீதும், 
வேலையறிக்கையின் மீதும் மாநில செயலாளர்கள் 
விவாதம் தொடர்ந்தது. மாலை 7.30 மணியளவில் 
இரவு உணவு இடைவேளைக்காக கூட்டம் ஒத்தி 
வைக்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

27.06.2016.மீண்டும் காலை மாநில செயலாளர்களின் விவாதம் 
தொடர்ந்தது. தமிழகத்தின் சார்பில் மாநில 
செயலாளர் தோழர் G.கண்ணன் விவாதத்தில் பங்கு 
கொண்டார். கீழ்க்கண்ட விசயங்களை பகிர்ந்து 
கொண்டார்.

* நமது மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட 
தீர்மானங்கள், 11.7.16 வேலைநிறுத்தம், Membership 
verification, GDS NFPE உறுப்பினர் சேர்ப்பு, casual labour 
union formation division level,

* பொதுச்செயலாளர் வேண்டுகோளை ஏற்றுஅடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தை தமிழகத்தில் 
நடத்துவது என தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக 
அறிவிக்கப்பட்டது.
* Post Men Cadre Restructure தொடர்பாக தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட Proposal முன் வைக்கப் பட்டது.
1st promotion,
Stg PM and Head Post Men - HSG-1
2nd promotion,
Cash Overseers and Mail Overseers - HSG-2
ஆக பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.
மற்றும் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பின் மத்திய சங்க நிர்வாகிகள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். நமது மாநிலத்தில் இருந்து உதவி பொதுச் செயலாளர் தோழர் P.திருமகன் உரையாற்றினார். கீழ்க்கண்ட பொருள்களின் மீது விவதித்தார்.
* அறிக்கையின் மீது விவாதத்தை மாநில செயலாளர்கள் இன்னும் செழுமைப்படுத்தியிருக்க வேண்டும்.
* 11.7.2016 வேலை நிறுத்தம் 100℅ வெற்றி பெற மாநில செயலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* GDS NFPE சங்கத்திற்கும், அஞ்சல் நான்கு சங்கத்திற்கும் தொப்புள்கொடி உறவு உள்ளதால் நாம் முன்னின்று சகோதர அமைப்புகளோடு இணைந்து AIPEU GDS சங்கத்திற்கு உறுப்பினர் சேர்ப்பை நடத்திட வேண்டும்.
* Cadre Restructure விசயத்தில் MTS தோழர்களுக்கும் seniority அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
* வேலூர் கோட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனையான, வேலூர் கோட்டை அஞ்சலகத்திலிருந்து பட்டுவாடா பிரிவை தற்காலிகமாக வேலூர் HO விற்கு மாற்றம் செய்யப்பட்டது. பட்டுவாடா பிரிவை மீண்டும் வேலூர் கோட்டை அஞ்சலகத்திற்கே மாற்றிட அகில இந்திய சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்பு R3 பொதுச் செயலாளர் தோழர் கிரிராஜ் சிங் அவர்கள் வாழ்த்தி பேசினார்.
இறுதியாக, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர்
M.கிருஷ்ணன் அவர்கள்,
"வேலைநிறுத்தம் உறுதி"
"தயாராகுங்கள் தோழர்களே"
என முடித்தார். மாலை 5.30 மணி அளவில் கூட்டம் முடிந்தது.
G.கண்ணன்,
மாநில செயலாளர்.









No comments:

Post a Comment