26.03.2015 ONE DAY STRIKE News Flash

Sunday, December 20, 2015

NFPE
தமிழக அஞ்சல் ஊழியர் வெள்ள நிவாரண பணிக்குழு 

வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி 

தோழர்களே!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை, கருணாநிதி நகரை சார்ந்த 200 ஏழை குடும்பங்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் நான்கின் சார்பாக 19.12.2015 அன்று காலை 8.00 மணி முதல் புனித தாமஸ் மலை அஞ்சலகத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்களை அஞ்சல் மூன்றின் மாநில தலைவர் தோழர் P.மோகன் அவர்கள் வழங்கி துவக்கி வைத்தார். அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் G.கண்ணன், அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில தலைவர் தோழர் ஸ்ரீவெங்கடேஷ், அஞ்சல் மூன்றின் முன்னாள் செயல் தலைவர் NG, அஞ்சல் நான்கின் மாநில உதவி தலைவர் தோழர் நடராசன், மாநில பொருளாளர் தோழர் ரவிச்சந்திரன், மாநில உதவிப் பொருளாளர் தோழர் பரமானந்தம், சென்னை வடகோட்ட செயலாளர் தோழர் வேதகிரி, மத்திய சென்னை கோட்ட தலைவர் தோழர் நாராயணன், தென் சென்னை கோட்ட செயலாளர் தோழர் ராஜேந்திரன், மாநில ஆடிட்டர் தோழர் வாசு தேவன்,  வட கோட்ட தலைவர் தோழர் ஜெயபிரகாஷ் உட்பட சுமார் 50 தோழர்கள் நிவாரணம் வழங்கும்  பணியை சிறப்பாக முடித்து வைத்தனர்.

இப் புனிதப் பணியில் கலந்துகொண்டு சிறப்பான சேவை செய்த பெண் தபால்காரர் தோழர்கள்  வசந்தா திருவல்லிக்கேணி    , கலையரசி திருவல்லிக்கேணி,  கிரிஜா சைதாப்பேட்டை , வசந்தி கோடம்பாக்கம் ஆகிய தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள்.

நிவாரணப்பொருட்களை திருவல்லிக்கேணி அலுவலகத்தில் இருந்து புனித தாமஸ் மலை அஞ்சலகத்திற்கு கொண்டு செல்வதற்காக நமது மெயில் வேனை அனுப்பி உதவி செய்த நமது CCR PMG திரு மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நிவாரணப் பொருட்களை பாதுகாப்பாக வைத்து ஏற்பாடுகளை செய்வதற்கு
திருவல்லிக்கேணி அலுவலகத்தில் இடம் கொடுத்து உதவிய மத்திய சென்னை கோட்டத்தின் SSP அவர்களுக்கும், திருவல்லிக்கேணி போஸ்ட் மாஸ்டர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு  புனித தாமஸ் மலை அஞ்சலகத்தில் இடம் கொடுத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அனுமதி வழங்கிய தென் சென்னை கோட்டத்தின் SSP அவர்களுக்கும், புனித தாமஸ் மலை அஞ்சலகத்தில் இடம் கொடுத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த போஸ்ட் மாஸ்டர் அவர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.



Thursday, December 17, 2015

NFPE  
தமிழக அஞ்சல் ஊழியர்கள் வெள்ள நிவாரண பணிக்குழு :

தோழர்களே ! 
                            பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது வெள்ள நிவாரண பணிக்குழுவின் சார்பாக 19.12.2015 காலை 8.00 மணி அளவில் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் அலுவலகத்தில் நமது CCR PMG திரு மெர்வின்  அலெக்சாண்டர் அவர்கள் முன்னிலையில் நிவாரண பொருட்கள் 200 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.  

Tuesday, December 15, 2015

 NFPE -P4 
 விருதுநகர்  கோட்ட  மாநாடு மற்றும் சிவகாசி கிளை மாநாடு 


தோழர்களே!
விருதுநகர் கோட்டத்தின் 36 வது மாநாடு மற்றும்  சிவகாசி கிளை மாநாடு  13.12.2015 அன்று விருதுநகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தோழர் M. சுப்பையா கோட்ட தலைவர் விருதுநகர், தோழர் S.சங்கர் கிளைத் தலைவர் சிவகாசி ஆகியோர் தலைமையில் வெகு சிறப்பாக நடை பெற்றது. 





               முதல் நிகழ்ச்சியாக தேசிய கொடியை தோழர் B.குருசாமி முன்னாள் மாநில உதவி தலைவர் அவர்களும், சம்மேளன கொடியை தோழர் M.சுந்தர்சிங் முன்னாள் மாநில உதவி தலைவர் அவர்களும், தபால்காரர் கொடியை தோழர் A.முருகேசன் முன்னாள் மாநில உதவி தலைவர் அவர்களும்,ஏற்றிவைத்தனர். பின் மாநாட்டை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள்.


                 ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு
ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின் கீழ் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக
தேர்வுசெய்யப்பட்டனர்.

விருதுநகர்.
கோட்டத்தலைவர் தோழர் M.சுப்பையா
கோட்டச்செயலாளர் தோழர் M. சோலையப்பன்
பொருளாளர் தோழர் P. கருப்பசாமி

சிவகாசி:
கிளை தலைவர் : P. கருப்பசாமி
கிளை செயலர் : தோழர் K. பால்சாமி
கிளை பொருளாளர் தோழர் G.மாரிமுத்து.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் P4,
தோழர் SB.ராஜமோகன் மண்டலசெயலாளர் மதுரை P4,
தோழர் R.ஜெயராஜன் கோட்டசெயலாளர் PSD மதுரை  P4,
தோழர் C.பெரியசாமி கோட்டசெயலாளர் கோவில்பட்டி  P4,

தோழர் D.செல்வராஜ் கிளை செயலாளர் ராஜபாளையம் P4,

தோழர் A.பழனிக்குமார்  கிளை செயலாளர் ராஜபாளையம் GDS-NFPE

ஆகிய தோழர்கள் வாழ்த்துரை மற்றும் சிறப்புரை வழங்கினார்கள்.



மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கிடுமாறு அறைகூவல் விடுத்தார், அதன் அடிப்படையில் ரூபாய் 12,200/ அந்த இடத்திலேயே ஊழியர்களால் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி P3,P4,GDS சங்கங்களின் சார்பாக முதல் கட்டமாக கோட்ட செயலாளர் தோழர் C.பெரியசாமி அவர்கள் ரூபாய் 10,000/ வழங்கினார் நிதி வழங்கிய அத்துணை தோழர். தோழியருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை மாநில சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.



Saturday, December 12, 2015

Friday, December 11, 2015

INDEFINITE STRIKE FROM 1st WEEK OF MARCH 2016 – SECRETARY, JCM (NC) STAFF SIDE WRITES TO GOVERNMENT.



No. Conf/Gen/2015/                                                              Dated - 09.12.2015                                                                                    

To

Shri P. K. Sinha
Cabinet Secretary
Government of India
New Delhi - 110001

Sir,  
       
Sub: - Grant of Flood Advance and other Financial Assistance for the staff including Gramin Dak Sewaks and Casual, Part-Time, Contingent employees who suffered substantial loss during the recent flood in Tamilnadu – Reg.
           
As you are aware that, there was torrential rain and catastrophic flood in Tamilnadu for the past three weeks and almost the Chennai City is devastated. Likewise, many areas viz. Cuddalore, Kanchipuram, Tiruvallur Districts and Puduchery union territory are the most affected parts of Tamilnadu during the recent flood. Water logged even in Airport, Railway Stations, National Highways etc. and almost every connecting link is severed and no vehicle service for the past several days in the City . National Disaster Management Team, Army, Navy and Air Force personnel are deployed for rescue operations and death toll crosses 188, as per official figure.

The Prime Minister of India recently visited Tamilnadu to make a personal survey of flood affected areas, described this as a National Disaster and announced Rs. 1000 Crores as immediate relief from the National Disaster Response Fund for rehabilitation works. The Tamilnadu State Govt. and Puduchery Union territory Govt. have announced the above mentioned areas as flood affected and various kinds of assistances/relief are extended to the affected people.

It is therefore requested to take necessary action so as to grant natural calamity advance to all the affected Central Government Employees, including Gramin Dak Sewaks and Casual, Part-time and Contingent employees, those who are residing in the flood affected Districts of Tamilnadu State.

Moreover, it is requested to take suitable action to grant Financial Assistance liberally to those officials/GDS/Casual Labourers who suffered with substantial loss of movable and immovable properties due to flood.

Soliciting immediate response.

Yours faithfully,


(M. Krishnan)
Secretary General

Friday, December 11, 2015

தமிழக ஆட்சியாளர்களின் நில அபகரிப்பை அலசித்தூக்கிய அலை!!!
இன்றைய இளைங்கர்களின் எண்ணங்களை,
 ஈட்டி முனை போல், அரசியல்வாதிகளின் நெஞ்சினை குத்தி வகுந்த  அலை!!!

ஆம், இன்றைய அரசியல்வாதிகளை நம்பாமல், தன்னெழுச்சியாக உதவிக்கரம் நீட்டிய நம் இளைங்கர்கள். 
ஆவேசம் கொண்ட ஆளும் 
அரசியல் வாதிகள்.
படிப்பினை தேவை.. 

          எல்லா இளைங்கர்களும் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 
         ஆனால், வெள்ள நிவாரண பணியில் அரசியல் கட்சி சார்பாக வராமல் பிற தொண்டு அமைப்புகள் சார்பாக வந்ததற்கான காரணம் என்ன?? 

          உதவி செய்ய வந்த அமைப்புகளை செய்ய விடாமல் தடுக்கின்ற அளவிற்கு  தமிழகத்தில் அயோக்கிய தனம் தலை விரித்துஆடுகின்றதா?? 

        அரசியல் வாதிகள் ஆவேசப்படாமல், சிந்திக்க வேண்டிய விஷயம். இளைங்கர்களுக்கு மனிதாபிமானம் நன்றாக உள்ளது, பெருமை பட வேண்டிய விஷயம், 
              ஆனால் அரசியல் கட்சிகள் மேல் நம்பிக்கை இல்லை என்கின்ற உண்மை வேதனை தரக்கூடியது. இது நாட்டிற்கு கேடு விளைவிக்கும் மோசமான முடிவு. 

                   இந்த வெள்ளம் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இளைங்கர்களை அரசியல் படுத்தாத எந்த நாடும் எழுச்சி பெறாது..
மாறாக சுடுகாடாகும்.... இயற்கை.... 
    

NFPE-P4

தமிழக அஞ்சல் ஊழியர்கள் - 
வெள்ள நிவாரண பணிக்குழு 
சென்னை - 600 005

தோழர்களே,
                         தமிழகம் வெள்ளம் சூழ்ந்த சூழ்நிலையில்  உள்ளது. அஞ்சல் ஊழியர்களும் இதற்க்கு விதிவிலக்கில்லை. நமக்கு 2, 3, 4 - 12 -2015 ஆகிய  3 நாட்களுக்கு, 
                       பணிக்கு வராதவர்களுக்கு சிறப்பு விடுப்பும், பணிக்கு வந்தவர்களுக்கு C OFF ம் கொடுக்கும் படி உத்திரவு வந்துள்ளது. 
                       அதே போல FLOOD ADVANCE வழங்குவதற்கான உத்திரவும் வந்து விடும். 

                     ஆனால் எந்த உதவியும் இல்லாமல் நடுத்தெருவில், வீடின்றி, உணவின்றி ஏக்கமாய், அநாதரவாக நிற்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கு நாம் ஏதாவது செய்திட வேண்டும் என்ற நோக்கத்தில், நமது அஞ்சல் ஊழியர்களுக்கும் மனிதாபம் உண்டு என்ற அடிப்படையில்,
"தமிழக அஞ்சல் ஊழியர்கள் - வெள்ள நிவாரண பணிக்குழு" என்ற பெயருடன் 
வெள்ள நிவாரண பணியை துவக்கியுள்ளோம். 

                      துவக்கிய உடன் முதல் நிதியாக,
 தோழியர் B.ஹேமா மகேஸ்வரி,
PA, திருவல்லிக்கேணி SO
சென்னை - 600 005 
                     அவர்கள் ரூபாய் 25,000/  யை  NFPE-P4 தமிழ் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்களிடம் வழங்கினார். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

தோழியர் B.ஹேமா மகேஸ்வரி அவர்களுக்கு மனிதம் அதிகம். 

                   அதே போல் முதலாவதாக 49 பெட் சீட்டுக்களை அனுப்பிய பாண்டிச்சேரி கோட்டத்திற்கும், மாநில தலைவர் தோழர் M.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.  

                   சென்னை மத்திய கோட்டம் 200 குடங்களை வழங்கியது. அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

                   தென் சென்னை கோட்டம் 200 குடும்பங்களுக்கான பலசரக்கு பொருட்களை வசூல் செய்துள்ளார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். 

                   பொருட்களை அனுப்ப வேண்டியவர்கள் 14.12.15 க்குள் அனுப்பி வைக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் .
G.கண்ணன்,
கன்வீனர், 
தமிழக அஞ்சல் ஊழியர்கள் - 
வெள்ள நிவாரண பணிக்குழு 
சென்னை - 600 005


Thursday, December 10, 2015

NFPE அஞ்சல் RMS ஊழியர்கள் இணைப்புக்குழு - தமிழ் மாநிலம் 

11.12.2015 அன்று நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் தள்ளி வைப்பு 

தோழர்களே!
                       தமிழகத்தில் பெய்த கனமழையாலும், வெள்ளத்தாலும்   லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளான காரணத்தினால் நாடு முழுவதும் வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்றுக்கொண்டிருகிறது. 
ஆகவே நாம் தமிழகத்தில் 11.12.2015 அன்று நடை பெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
G.கண்ணன்,
மாநில கன்வீனர் 

                     

Wednesday, December 9, 2015

Wednesday, December 9, 2015



NJCA MEETING DECISION
INDEFINTE STRIKE FROM 1ST WEEK OF MARCH 2016

Meeting of the National Joint Council of Action (Railways, Defence and Confederation) was held on 08.12.2015 at JCM National Council Staff Side office, New Delhi. Detailed deliberations on 7th CPC related issues (including Gramin Dak Sewaks and Casual, Contract and daily-rated workers) was held and a Common charter of demands was finalized. It is further decided that the NJCA shall go on indefinite strike from the 1st week of March 2016, if the Government fails to reach a negotiated settlement with the staff side before 1st week of February 2016. A letter intimating this decision will be given to the Government shortly along with the common charter of demands. Letter to Government and charter of demands will be published in the website within two days.

(M. Krishnan)
Secretary General
Confederation
NFPE - P4

தோழர்களே!
                     உடனடிப் பணி இரண்டு நாட்கள்!!! 

வெள்ள நிவாரண பணியில் ஈடு படுங்கள்!!!
                    
அனைத்து பணிகளையும் ஒதுக்கி வையுங்கள்!!!

அனைத்து கோட்ட/கிளை செயலர்களே !!
                         ஏற்கனவே வெள்ள  நிவாரண பணி சம்பந்தமாக உங்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பியுள்ளேன் . தற்பொழுது எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு..

                        சென்னை மற்றும் கடலூர் பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். திருச்சி மண்டலம் கடலூருக்கு பொருட்களை அனுப்ப வேண்டும். மற்ற மண்டலங்கள் பொருட்களை  சென்னைக்கு அனுப்ப வேண்டும். 

                       கடலூருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டி தொடர்பு கொள்ள வேண்டிய  முகவரி:
S.கோவிந்தராஜன், மண்டல செயலாளர்,  NFPE - P4,  திருச்சி HO. CELL: 9344213462.
D.ரவிக்குமார்,  கோட்ட செயலாளர்,  NFPE - P4,  கடலூர்  HO. CELL: 9486015791.

அனுப்ப வேண்டிய பொருட்கள்: 

1. போர்வை , பாய்.சால்வை 
2. பிளாஸ்டிக் வாலி மற்றும் கப், குடம் , சாதம், குழம்பு  வைப்பதற்கான                     அலுமினிய பாத்திரம் இரண்டு , தாளிக்கும் பாத்திரம் ஒன்று, கரண்டி                      இரண்டு. 
3. உணவுப்பொருட்கள். அரிசி, பருப்பு, எண்ணை, கடுகு உளுந்தம்பருப்பு , உப்பு ,     வத்தல், புளி. 
4. ஸ்டவ் .
5. தீப்பட்டி, லைட்டர் , மெழுகுவர்த்தி,டார்ச். 
6.டூத் பிரஸ் , பேஸ்ட் . சோப்பு. 

இதில் முதல் மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து மொத்தமாக அனுப்பினால் நன்று.

ஒவ்வொரு ஊழியரும்  முதல் மூன்றில் ஏதாவது ஒன்றை உங்களது கோட்ட செயலாளரிடம் ஒப்படைத்தால், "உங்களால் ஒரு குடும்பத்திற்கு உதவி". 
கோட்ட / கிளை செயலாளர்கள் மூன்றில் ஒன்றை வசூலித்து மொத்தமாக அனுப்பினால்   உதவியாய் இருக்கும். 

                                                                                                          தோழமையுடன், 
G.கண்ணன்,
மாநில செயலாளர், 
NFPE - P4, 
சென்னை - 600 005.




Tuesday, December 8, 2015

NFPE

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்சங்கம்

தபால்காரர் மற்றும் MTS - தமிழ்மாநிலம், 

திருவல்லிக்கேணி, சென்னை 600005.


போர்க்கால நடவடிக்கை 

அஞ்சல் ஊழியர்களே !!

களம் இறங்குவீர் தோழர்களே !!!


வெள்ளத்தால் 

பாதிக்கப்பட்டவர்களுக்கு 

கைகொடுப்போம் 

நிவாரண பொருட்கள் வழங்குவீர் 

தோழர்களே!!
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி, உணவின்றி, உடுத்த உடையின்றி ரோடுகளில் நிற்கும் அவல காட்சிகள் இதயத்தில் ரத்தம் கசிகிறது. 

தபால் ஊழியர்களாகிய நாம் நம்மால் முடிந்த உதவியை செய்வது நமது கடமை. 
ஆகவே உடனடியாக தமிழக தபால் ஊழியர்கள் உங்களால் முடிந்த பொருட்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

G..கண்ணன்  
தமிழக அஞ்சல் ஊழியர்கள் - வெள்ள நிவாரணப் பணிக்குழு
திருவல்லிக்கேணி அஞ்சலகம் 
சென்னை - 600 005.
அனுப்ப வேண்டிய அத்தியாவசிய பொருட்கள்:

1.உணவுப் பொருட்கள் 
2.போர்வை . சால்வை ,
3. டூத் பேஸ்ட் , பிரஷ் , சோப்பு, 
4. தீப்பட்டி, லைட்டர், டார்ச் லைட்,மெழுகுவர்த்தி 
5. சமையல் பாத்திரங்கள், 
இது தவிர உங்களால் முடிந்த பொருட்களை விரைவாக அனுப்பிவைக்குமாறு 
கேட்டுக்கொள்கிறோம். 

குறிப்பு: தயவு கூர்ந்து பொருட்களை புதியதாக வாங்கி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் 
       தோழமையுடன், 
M.பன்னீர்செல்வம்                                                                                      G.கண்ணன் 
மாநில தலைவர்                                                                             மாநிலச் செயலர்      
NFPE - P4