26.03.2015 ONE DAY STRIKE News Flash

Sunday, October 30, 2016

Temporary Employee to be paid at par with regular worker: SC

HIGHLIGHTS

SC said contractual employees are entitled to wages at par with permanent employee
  • Principle of ‘equal pay for equal work’ must be followed, SC said
  • Undoubtedly, the action pf paying lesser wage is oppressive, the bench said
NEW DELHI: In a big relief to lakhs temporary employee who have been hired by government departments and agencies across the country on contractual basis, the Supreme Court on Wednesday held that they are entitled to wages at par with permanent employees and principle of 'equal pay for equal work' must be followed.

A bench of Justices JS Khehar and SA Bobde said the principle of 'equal pay for equal work' constitutes a clear and unambiguous right vested in every employee whether engaged on regular or temporary basis.

"In our considered view, it is fallacious to determine artificial parameters to deny fruits of labour. An employee engaged for the same work, cannot be paid less than another, who performs the same duties and responsibilities. Certainly not, in a welfare state. Such an action besides being demeaning, strikes at the very foundation of human dignity," the bench said.

The bench said the principle had been expounded through a large number of judgments rendered by the apex court and and constitutes law declared by the Supreme Court.

"Any one, who is compelled to work at a lesser wage, does not do so voluntarily. He does so, to provide food and shelter to his family, at the cost of his self respect and dignity, at the cost of his self worth, and at the cost of his integrity. For he knows, that his dependents would suffer immensely, if he does not accept the lesser wage," Justice Khehar, who wrote the judgement, said.


"Any act, of paying less wages, as compared to others similarly situate, constitutes an act of exploitative enslavement, emerging out of a domineering position. Undoubtedly, the action is oppressive, suppressive and coercive, as it compels involuntary subjugation," he said.

The court passed the verdict on a bunch of petition filed by tempoary employee working for state of Punjab seeking wage parity with regular employee. They approached the apex court after Punjab and Haryana High Court held that temporary employees were not entitled to the minimum of the regular pay-scale, merely for reason, that the activities carried on by them and the regular employees were similar.

Setting aside the HC order, the apex court held that the principle of equal pay for equal work must be followed in the country as India was a signatory of International Covenant on Economic, Social and Cultural Rights.

"There can be no doubt, that the principle of equal pay for equal work would be applicable to all the concerned temporary employees, so as to vest in them the right to claim wages, at par with the minimum of the pay-scale of regularly engaged government employees, holding the same post,"it said.

"India is a signatory to the covenant, having ratified the same on April 10, 1979. There is no escape from the above obligation, in view of different provisions of the Constitution and in view of the law declared by this court under Article 141 of the Constitution of India, the principle of 'equal pay for equal work' constitutes a clear and unambiguous right and is vested in every employee - whether engaged on regular or temporary basis,"it said.

Read at: Times of India


GDS ஊழியர்கள் போனஸ் 7000/
எப்படி வந்தது??
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொது செயலாளர் தோழர் M.கிருஷ்ணன் அவர்களின் விளக்கம்.

1.4.2014 முதல் அனத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் போனஸ் உச்சவரம்பு 3500 ல் இருந்து 7000 மாக 29.8.2016 ல் மத்திய அரசால் உத்திரவு வெளியிடப்பட்டது. அதற்கான நிலுவைத் தொகை 7000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அஞ்சல் வாரியம் இந்த உயர்த்தப்பட்ட போனஸ் உச்சவரம்பு உத்திரவை GDS ஊழியர்களுக்கு அமுல்படுத்த மறுத்து விட்டு, GDS ஊதியக்குழுவின் பரிந்துரைக்காக அனுப்பிவிட்டது.

இதற்கு முன் நடராஜமூர்த்தி கமிட்டி, GDS ஊழியர்களின் உற்பத்தி திறன் 50% மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு 3500 ல் பாதி 1750 மட்டும் போனஸாக வழங்கினால் போதும் என்று பரிந்துரை வழங்கியது. இதற்கு எதிராக அப்பொழுது NFPE மற்றும்  AIPEU-GDS அமைப்புகள் FNPO மற்றும் NUGDS அமைப்புகளோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட, அப்போதைய துறை அமைச்சரோடு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அமைச்சரின் சாதகமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் GDS ஊழியர்களுக்கு 3500 போனஸை மூன்று முறை மறுத்து 2500 வழங்கியது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்புதான் நிதியமைச்சகம் 3500 போனஸை ஏற்றுக்கொண்டு வழங்கியது.

இந்த முறை கமலேஷ் சந்திரா குழுவின் மாறுபட்ட நிலை:
இந்த முறை GDS குழுவின் தலைவர் கமலேஷ் சந்திரா  உயர்த்தப்பட்ட 7000 ரூபாய் போனஸை GDS ஊழியர்களுக்கும் பரிந்துரை செய்தது.

"GDS ஊழியர்களால் நடத்தப்படும் அலுவலகங்களில் வருமானமும் செலவும் சமமாக உள்ளது. அஞ்சல் துறையின் மொத்த பற்றாக்குறை ரூபாய் 6000 கோடியாக உள்ளது. ஆனால் GDS ஊழியர்களால் பற்றாக்குறை என்பது 200 கோடி மட்டுமே. அஞ்சல் RMS அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்களில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை பார்க்கும் பொழுது GDS ஊழியர்களின் வருவாய் பற்றாக்குறை என்பது மிகவும் குறைவானதே என்று எடுத்துக்காட்டிய பின், GDS போனஸ் கோப்பு அஞ்சல் வாரியத்தால் நிதியமைச்சகத்திற்க்கு அனுப்பப்பட்டது.  விரிவான ஆய்விற்க்குப்பின் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு அஞ்சல்துறையால் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு 7000 போனஸ் உத்திரவு வெளியிடப்பட்டது.

NFPE மற்றும் AIPEU-GDS சங்கங்களின் பங்களிப்பு:
NFPE சம்மேளனத்தின் மாபொதுச்செயலாளர் தோழர் RN.பராசர் மற்றும் AIPEU-GDS-NFPE பொதுச்செயலாளர் தோழர் R.பாண்டுரெங்கராவ் இணைந்து FNPO மற்றும் NUGDS அமைப்புகளை இணைத்துக் கொண்டு GDS ஊழியர்களுக்கு எதிராக போனஸ் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்தும், அனைத்து கேசுவல் மற்றும் பகுதிநேர, கண்டிஜன்ட் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க கோரியும் பல இயக்கங்களுக்கு அறைகூவல் விட்டன. கோட்ட, மண்டல, மாநில அளவில் ஆர்ப்பாட்டங்களும் தர்ணா போராட்டங்களும் நடத்தப்பட்டது. நவம்பர் 3 2016 முதல் டெல்லி தலைமை அஞ்சலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும், நவம்பர் 9 மற்றும் 10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீசும் அஞ்சல் துறை செயலரிடம் 20.10.16 அன்று வழங்கப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலைநிறுத்த பிரச்சார இயக்கத்திற்கு ஊழியர்களிடம் உற்சாக வரவேற்பு கிடைத்தது.

இலாகா - GDS - ஊழியர் ஒற்றுமை .. உடைக்க முடியாத ஒற்றுமையை ஏற்படுத்திய தோழர் ஆதி:
ED ஊழியரை இலாக்கா ஊழியராக்கு என்ற ஒரே கோரிக்கை வைத்து 1984 செப்டம்பர் 19 அன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தோழர் ஆதிநாராயணா அவர்கள் வெற்றிகரமாக நடத்தினார்கள். 32 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் NFPE, AIPEU-GDS மற்றும் FNPO,NUGDS அமைப்புகள் இணைந்து GDS மற்றும் கேசுவல் ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக மட்டுமே நவம்பர் -9,10 -2016 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
NFPE மற்றும் அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு எப்பொழுதும் GDS மற்றும் கேசுவல் ஊழியர்களை விட்டுக் கொடுக்காது, அவர்களும் அஞ்சல் குடும்ப உறுப்பினர்கள் என்பதை இப்பொழுதும் நிரூபித்துள்ளோம். இந்த உறுதியான தொழிலாளிவர்க்க நிலைபாட்டை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ, திரித்துக் கூறவோ முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட  GDS சங்கத்தின் நிலை என்ன??
NFPE சங்கங்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் கொடுப்பதை விமர்சனம் செய்யும் திரு மகாதேவைய்யா அவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மட்டுமே நம்புவதாக கூறும் அவர் இந்த முறை 25,26 - 10 -2016 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது மட்டுமல்ல அதற்கான பிரச்சாரமும் செய்யாமல், போனஸ் உத்திரவு வராமலே திடீரென 24.10.2016 அன்றே வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது எதற்கு என்ற கேள்வியை GDS ஊழியர்கள் கேட்கிறார்கள். அங்கீகாரம் ரத்தாகிவிடும் என்கிற அமைச்சகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டு GDS ஊழியர்கள் கோரிக்கைகளை விலையாக கொடுத்து விட்டார். திரு மகாதேவைய்யா அவர்கள் GDS ஊழியர்களை சில காலம் ஏமாற்றலாம், எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை ஊழியர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

NFPE, AIPEU-GDS மற்றும் PJCA நிலைபாடு:
திரு மகாதேவையாவுக்கு வந்த அதே மிரட்டல் NFPE/AIPEU-GDS மற்றும் PJCA வுக்கு வந்தாலும், GDS மற்றும் கேசுவல் ஊழியர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நவம்பர் 9,10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தே தீரூம் என்ற உறுதியான நிலைபாட்டை PJCA எடுத்ததின் காரணமாகத்தான் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு,  உயர்த்தப்பட்ட 7000 போனஸ் உத்திரவும், கேசுவல் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் புதிய ஊதியம் வழங்கிடும் உத்திரவு இதற்கு முன்பே வந்தாலும், இந்த உத்திரவை அமுல்படுத்தாத அனைத்து மாநில CPMG களும் கறாராக அமுல்படுத்திட மீண்டும் கடிதம் அனுப்பிட இலாக்கா ஏற்றுக் கொண்டது.

GDS-ஊதியக்குழுவும் - NFPE/AIPEU-GDS பங்களிப்பும் :
        NFPE மற்றும் AIPEU-GDS அமைப்பும் GDS ஊதியகுழுவிடம்விரிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை கொடுத்துள்ளது.  இந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழு GDS ஊதியகுழுத்தலைவர் திரு.கமலேஷ் சந்திரா அவர்களை மூன்றுமுறை நேரில் சந்தித்து நேரடி சாட்சியம் அளித்துள்ளது. அரசு ஊழியர் அந்தஸ்தும், இலாக்கா ஊழியருக்கு இணையான சலுகைகளும் உரிமைகளும் GDS ஊழியருக்கு தரப்பட வேண்டும் என்பதே நம் முக்கிய கோரிக்கை.  GDS ஊதிய குழு நவம்பர் 2016 ல் பரிந்துரைகளை வழங்குவதாக கூறியுள்ளது.  பரிந்துரைகள் GDS ஊழியருக்கு எதிராக இருக்குமானால் NFPE, AIPEU-GDS மற்றும் அஞ்சல் கூட்டு போராட்ட குழுவோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பலபோராட்டங்களை  நடத்திடும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக GDS  ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத திரு மகாதேவய்யா அவர்கள் GDS ஊழியர்களின் எதிரி இலாக்கா ஊழியர்கள் என்று சித்தரித்து அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமையை சிதைத்து வருகிறார்.  இச்செயல் மற்ற பல மத்திய அரசு ஊழியர்கள் அமைப்போடு இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வெல்வதற்கு எதிரானது.

இத்தகைய சூழலில் ஒவ்வொரு GDS ஊழியரும்
AIPEU-GDS-NFPE அமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.  ஒன்றுபட்ட போராட்டமே GDS ஊழியர்களின் நியாயமான  பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு GDS ஊழியரும் நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்ப்பில் AIPEU-GDS-NFPE அமைப்புக்கு ஆதரவாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளம் மற்றும் JCM (தேசிய குழு - ஊழியர் தரப்பு)  பங்களிப்பும் பாராட்டகூடியது.  25.10.2016 அன்று JCM National council கூட்டத்தில் GDS பிரச்சனையை  அரசுடன் விவாதித்து உடனடி தீர்வு காண  வலிவுறுத்தப்பட்டது.

NFPE, AIPEU-GDS மற்றும் FNPO, NUGDS உள்ளடக்கிய அஞ்சல் போராட்ட குழுவின் போனஸ் போராட்டம் மாபெரும்   வெற்றியே!!

GDS- இலாக்கா ஊழியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை தனிமைப்படுத்துவோம்....

இலாக்கா GDS ஊழியர்களின் - அமைப்புகளின் ஒற்றுமையை பலப்படுத்துவதின் மூலம் எதிர்காலத்தில் GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு போர்முரசொலிப்போம்!!  தடைகளை தகர்த்தெறிவோம்.

வெற்றி முரசு கொட்டுவோம்.

புரட்சிகர போராட்ட வாழ்த்துக்களுடன்,
G.கண்ணன்,
மாநில செயலாளர்,
AIPEU - PM & MTS,
தமிழ் மாநிலம்.

Friday, October 28, 2016

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

தீபாவளிக்கு ஆயிரம் கதைகள் சொன்னாலும், குறிப்பாக கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களின் குடும்பங்களில் சிறுவர்களுக்கு  தீபாவளி என்றால் முதலில் ஞாபகம் வருவது    டவுசர் சட்டை, பாவாடை சட்டை (தாவணியும்) தான்.

ஏனென்றால் அடுத்த வருட தீபாவளி வரை அதுதான். அதனால்தான் டவுசருக்குப்பின்னால் தபால்பெட்டியை நிறைய மாணவர்கள் வைத்திருந்தார்கள். ஆகவே தான் எதனால் தீபாவளி வந்தது என்பதை விட எப்பொழுது வரும் என காத்திருந்தார்கள்.

அதுமட்டுமல்ல,
இட்லி, வடை, சுசியம், சீடை, முறுக்கு போன்ற பண்டங்களை ஆசைதீர சாப்பிடுவதும் அன்றுதான். சீடை, முறுக்கு யை நிறைய செய்து பானையில் போட்டு வீட்டின் மேல் கட்டி விட்டு நாட்கணக்கில் உபயோகிக்கும் நாளும் தீபாவளிதான்.

இப்படி ஏழைகளின் கனவு நாள், தீபாவளி...
அந்த மக்களின் மகிழ்ச்சிக்காக..

(நாங்களும் எங்கள் குடும்பத்தில் இக்கனவை, ஆண்டுக்கு இரண்டு உடைகளை பெற்றுள்ளோம்.)

வாழ்த்துக்கள்..தீபாவளி வாழ்த்துக்கள்.
G.கண்ணன்,
மாநில செயலாளர்.

Thursday, October 27, 2016

GDS BONUS ORDERS RELEASED TODAY.

தோழர்களே!
நமது போராட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி. GDS தோழர்களுக்கு போனஸ் 7000 ற்கான நிலுவைத்தொகைக்கான உத்திரவு இன்று வெளியாகி உள்ளது.

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.
Postal JCA
Tamil nadu Circle.

NFPE -FNPO அனைத்து மாநில செயலாளர்களின்  அவசரக்கூட்டம்.. 27.10.2016 இன்று மாலை 5.30 மணி. இடம் அண்ணாசாலை.

பொருள்: ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அஞ்சல் நிர்வாகம் ஊழியர்களை பணிக்கு வரச்சொல்வது சம்பந்தமாக... முடிவு எடுக்க..

தோழர்களே!
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணிக்கு வரச்சொல்லும் உத்தரவை கண்டித்தும், ரத்து செய்ய கோரியும் நேற்று 26.10.2016 அன்று PJCA சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெகு சிறப்பாக நடந்துள்ளது. அனைத்து கோட்ட/கிளை செயலாளர்களுக்கும் NFPE , FNPO JCA சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

மேற்கு மண்டல PMG அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனிதாபிமானத்தோடும், ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் தீபாவளி மற்றும் அடுத்த ஞாயிற்று கிழமையில் மேற்கு மண்டலம் மற்றும் தென்மண்டல ஊழியர்கள் பணிக்கு வர வேண்டியதில்லை என்ற உத்தரவிட்ட மேற்கு மண்டல PMG அவர்களை நன்றியுடன் வாழ்த்துகிறோம்.

இதற்கிடையில்,
இது விசயம் சம்பந்தமாக 26.10.16 காலை 10.30 மணிக்கு பேசலாம் என்று   PMG MM அவர்கள் PJCA கன்வீனர்களை அழைத்ததின் அடிப்படையில் தோழர்கள் P.குமார் தலைவர் PJCA FNPO,  G.கண்ணன், கன்வீனர் PJCA NFPE, P.சுகுமாறன் மாநில செயலாளர் FNPO - P4 ஆகியோர் சென்றோம்.

நிர்வாக தரப்பில்  PMG MM மற்றும் DPS Head Quarter அவர்களும் இருந்தார்கள். சுமார் அரை மணி நேரம் பேசினோம். பின்பு CPMG யுடன் பேசிவிட்டு மதியம் பதில் சொல்வதாகவும்,  அதுவரை காத்திருக்கமாறும் சொன்னார்கள். மாலை 5.00 வரை CPMG அலுவலகத்தில் இருந்தோம். இது வரை எந்த தகவலும் இல்லாத சூழ்நிலையில் இன்று மாலை PJCA, ஊழியர்களின் கஷ்டத்தை ஒழிக்கும் படியான, சரியான முடிவை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்,
P.குமார்.                                         G.கண்ணன்,
தலைவர்,                                        கன்வீனர்,
PJCA.                                                PJCA

Monday, October 24, 2016

NFPE - P4
Tamilnadu Circle.

24.10.2016.

கோட்ட / கிளை செயலாளர்கள் மற்றும் நமது சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு...

தோழர்களே!
நமது மாநில மாநாடு டிசம்பர் 29,30  2016 ல் திண்டிவனம் நகரில் நடைபெறும் நிகழ்வை முன்பே அறிவித்திருந்தோம்.

நடைபெரும் மாநில மாநாட்டில் , தமிழகத்தில் 2015-2016 ஆண்டிற்கான(இறுதியாக நடைபெற்ற தேர்வு) SSLC மற்றும் +2 தேர்வுகளில் பரிட்சை எழுதிய, அஞ்சல் துறையில் தபால்காரர் மற்றும் MTS ஆக பணிபரியும் ஊழியரின் குழந்தைகளில், மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த குழந்தைகளை கௌரவிக்க இருப்பதால் பெற்றோர்கள் குழந்தைகளின் மார்க் லிஸ்ட்டை அந்தந்த கோட்ட செயலரிடமோ அல்லது மாநில சங்கத்திற்கோ நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் முகவரியுடன் (செல் நம்பர்)அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல், தமிழ் மாநில அஞ்சல் துறையில் பணிபுரியும் விளையாட்டு வீரர்கள் நமது துறைக்காக  National level tournaments, International level tournaments, Olympics ஆகியவைகளில் கலந்து கொண்டு  தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்ற வீரர்களை நமது மாநில மாநாட்டில் கௌரவிக்க இருப்பதால் , அவர்களின் சான்றிதல்களின் நகல் மற்றும் விபரங்களை கோட்ட செயலாளர்களின் மூலமாகவோ, நேரடியாக மாநில சங்கத்திற்கோ உங்கள் முகவரியுடன் 30.11.2016 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். With Mobile number.
மாநில சங்க முகவரி:
G.Kannan,
Circle secretary,
AIPEU-Postmen&MTS,
Royapettah - PO,
Chennai-600014.

G.கண்ணன்
மாநில செயலாளர்.

Sunday, October 23, 2016







NCA பேரவையின் சார்பாக நாகர்கோவில் நகரில் நடைபெறும் தோழர் N.பாலு அவர்களின் நினைவேந்தல் கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

பேரவைக்கும், பொதுச்செயலாளர்  தோழர் SK.ஜேக்கப்ராஜ் அவர்களுக்கும்  நான் அனுப்பிய மடல்...

                                                    23.10.2016
NCA பேரவையின் பொதுச் செயலாளர் அன்புத் தோழர் SK ஜேக்கப்ராஜ் அவர்களுக்கு, NFPE - P4 மாநில செயலாளர் G.கண்ணனின் பதிவு.

உடல்நிலை சரியில்லாததின் காரணமாக தோழர் N.பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் தனக்கென  முத்திரை பதித்த தோழர் N.பாலு அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்விடம்,
                எதிர்காலத்தில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராட்டப் பாதையில், "ஒற்றுமை என்ற முரசு" ஓங்கி ஒலிக்கும் களமாக, அஞ்சல் ஊழியர் போர்ப்படையின் தளத்தை விரிவுபடுத்தும் பாசறையாக உருவெடுக்க வேண்டும் என்ற என் பதிவை,
         அஞ்சா நெஞ்சன் என பெயர் தாங்கி, இரும்பு இதயம் கொண்ட முரட்டுத் தோழன் N.பாலு அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

            இந்நாளில் அவரிடம் என்னைக் கவர்ந்த சில விசயங்களை பதிவு செய்ய கடமையுடையேன்.

              தோழர் பாலு அவர்களின்,
அஞ்சாமை, வீரம், பிரச்சனைகளை அதிகாரவர்க்கத்திடம் எகிரித்தகர்க்கும் பாங்கு, அதிகாரிகளை அதிரவைக்கும் தொழிலாளிவர்க்கத் திமிர், இத்தனையும் தாண்டி முத்தாய்ப்பாய்,
போராட்டங்கள், மாநாடுகள், அணி பிரச்சனைகள் வரை  எந்த நிகழ்வானாலும் மேடைகளில் அமராமல்,
              "ஊழியரோடு ஊழியராய் கீழே கலந்து பின்னி பினைந்துவிடும் அடிமட்ட வரையிலான ஊழியர் உணர்வு"  இவையனைத்தும் நிகழ்கால எதிர்கால தொழிற்சங்கவாதிகளும், தற்பொழுது பணிக்கு வந்த இளைஞர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்.

                   இறுதியாக,
தோழர் பாலு அவர்களுடன்  கருத்து வேறுபாடு உள்ள அணிகள், தலைமைகள். தலைவர்கள், ஊழியர்கள் இருந்தாலும் , ஆயிரம் முரன்பாடுகள் இருந்தாலும்,
                 "அஞ்சல் ஊழியருக்கான சேவையில், அவர் தம் குடும்பத்தையும் புறம் தள்ளி தன் வாழ்நாள் முழுமையும் அர்ப்பணித்தார்" என்ற உண்மையை உணர்ந்து நாமும்,
"தொழிலாளி வர்க்க உரிமைக்காக முழுமையாக அர்ப்பணிக்க சபதமேற்ப்போம்.
தோழமையுடன்,
உங்கள் கண்ணன்.

Friday, October 21, 2016

NFPE-P4
சென்னை நகர மண்டல,
கோட்ட / கிளை செயலாளர்கள் கூட்டம். 20.10.2016 மதியம்.

மாநில மாநாட்டு வேலைகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக அவசர கூட்டம் 20.10.2016 மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை அண்ணாசாலை அஞ்சலகத்தில் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தோழர்கள்,
G.கண்ணன், மாநில செயலாளர்,
S.ஜோதிமணி, துணை மாநில செயலாளர்,
M.நடராஜன், மாநில உதவி தலைவர்,
G.சுரேஷ்பாபு, மாநில உதவி செயலாளர்,
S.ரவிச்சந்திரன், மாநில பொருளாளர்,
R.பரமானந்தம், மாநில உதவி பொருளாளர்,
S.வாசுதேவன், மாநில தனிக்கையாளர்,
R.சீனிவாசன், கோட்ட செயலாளர் அண்ணாசாலை,
S.வேதகிரி, கோட்ட செயலாளர் வடசென்னை,
M.நாராயணன் கோட்ட தலைவர், மத்திய சென்னை,
R.வெங்கட்டரமணி, மத்திய சென்னை,
R.முனுசாமி, மத்திய சென்னை,
P.பிரசன்னா வெங்கடேஷ், தாம்பரம் ஆகிய தோழர்கள்
கலந்து கொண்டார்கள்.

மாநாட்டு நன்கொடை முதல் தவனையாக ரூபாய் 15,000 யை சென்னை மத்திய கோட்ட செயலாளரும், மாநில உதவி பொருளாளருமான தோழர் R.பரமானந்தம் அவர்கள் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்களிடம் வழங்கினார்கள். அவர்களுக்கு மாநிலசங்கம் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதே போல் சென்னை GPO கோட்டம் சார்பாக விளம்பரத்திற்கான வசூல் ரூபாய் 6000 க்கான காசோலையை  கோட்ட தலைவரும், மாநில உதவி தலைவருமான தோழர் M.நடராஜன் அவர்கள் வழங்கினார்.
அவர்களுக்கும் மாநில சங்கம் நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

பாண்டிச்சேரி கோட்டம் ஒவ்வோரு உறுப்பினருக்கும் ரூபாய் 1000/ என்ற அடிப்படையில் 60 உறுப்பினர்களில் இதுவரை ரூபாய் 45,000/ வசூல் செய்து சாதனை படைத்துள்ளார்கள். அவர்களை மனதார பாராட்டுவோம்.

மற்ற கோட்ட / கிளை செயலாளர்களும் மாநாட்டு வசூலை விரைந்து முடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

G.கண்ணன்,
மாநில செயலாளர்.


GDS ஊழியர்களுக்கு ரூபாய் 7000/ அடிப்படையில் 2014-2015 க்கான போனஸ் அரியர்ஸ் வழங்கிட கோரியும்,

கேஷுவல் ஊழியர்களுக்கு 1.1.2006 முதல் திருத்தப்பட்ட ஊதியத்திற்கான நிலுவைத் தொகை வழங்கிட கோரியும்,

Postal JCA (NFPE/FNPO) அறைகூவலின் அடிப்படையில், CPMG அலுவலகம் முன் (சென்னை) இன்று (20.10.2016) காலை முதல் மாலை வரை  தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு G.கண்ணன், கன்வீனர் COC NFPE மற்றும் P.குமார், கன்வீனர் COC FNPO ஆகிய தோழர்கள் கூட்டுத்தலைமை ஏற்று நடத்தினர்.

தோழர் S.சந்தோஷ்குமார், அகில இந்திய தலைவர், கணக்கு பிரிவு சங்கம், NFPE அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.

தோழர்கள்,
S.நூர்முகமது, EX.GS. R4 FNPO,
R.B.சுரேஷ், மாநில செயலாளர் கணக்குபிரிவு, NFPE,
P.கோதண்டராமன், மாநில செயலாளர், GDS FNPO,
J.தேவன், மாநில தலைவர் R4, NFPE,
M.பன்னீர்செல்வம், மாநில தலைவர் P4, NFPE,
மணவாளன், மாநில பொருளாளர் P4, FNPO,
K.ரமேஷ், மாநில செயலாளர் R3, NFPE,
C.P.குணசேகரன், மாநில செயலாளர் Admin, FNPO,
B.பரந்தாமன், மாநில செயலாளர் R4, NFPE,
V.ரவிச்சந்திரன் மாநில செயலாளர் Admin, NFPE,
R.தன்ராஜ், மாநில செயலாளர், AIPEU-GDS-NFPE,
N.கோபாலகிருஷ்ணன் EX.WP/P3 , NFPE,
D.சிவகுருநாதன் மாநில தலைவர் கேஷுவல் ஊழியர்சங்கம், NFPE மற்றும் மாநில சங்க நிர்வாகிகள், கோட்ட/கிளை சங்க நிர்வாகிகள் போராட்ட கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள்.

தோழர் S.தியாகராஜன், மாபொது செயலாளர் FNPO அவர்கள் நிறைவுரையாக நீண்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

தோழர் S.சிரிதரன் மாநில செயலாளர் R4, FNPO அவர்கள் நன்றி கூற தர்ணா போராட்டம் முடிவடைந்தது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்....

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
G.கண்ணன்,
கன்வீனர்,
COC - NFPE.