26.03.2015 ONE DAY STRIKE News Flash

Wednesday, July 15, 2015

NFPE-P4

அஞ்சல் நிர்வாகத்தை  அதிரவைத்த 
அஞ்சல் நான்கின் ஆர்ப்பாட்டம்  ...

ஊடகங்களின் மூலம் தபால்காரர்களை கொச்சைப்படுத்தி தபால்துறையை இழிவு படுத்துகின்ற CCR PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களை கண்டித்து 14.07.2015 மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை CPMG அலுவலகத்திற்கு முன்பாக பெரும் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை வகித்தார். 

அஞ்சல் நான்கின் அகில இந்திய உதவி செயலாளர் தோழர் P.திருமகன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். 

அஞ்சல் நான்கின் தமிழ் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் கோரிக்கைகளை விளக்கி உரை நிகழ்த்தினார். 

அஞ்சல் நான்கின்  முன்னாள் தமிழ் மாநில செயலாளரும் தமிழக அஞ்சல் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் AGP அவர்கள் நீண்ட கண்டன உரை நிகழ்த்தினார். 

நமது சம்மேளனத்தின் உதவி பொதுச்செயலாளர் தோழர் S.ரகுபதி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். 

மற்றும் தோழர்கள், 
B.பரந்தாமன் தலைவர்  - மாநில செயலாளர் R4, 
A.வீரமணி அகில இந்திய உதவி பொது செயலாளர் P3,
J.ஸ்ரீவெங்கடேஷ் மாநில தலைவர் P3, 
RB.சுரேஷ் மாநில செயலாளர் A3,
D.சிவகுருநாதன் மாநில தலைவர் கேசுவல் ஊழியர் சங்கம், 
A.மணிமேகலை மகிலா கமிட்டி தமிழ் மாநிலம் P3,
A.பெருமாள் முன்னாள் மாநில உதவி தலைவர் P4,
S.ரவிச்சந்திரன் மாநில பொருளாளர் P4,
M.நடராஜன் மாநில உதவி தலைவர் P4,
G.சுரேஷ் பாபு மாநில உதவி செயலாளர் P4, 
R.பரமானந்தம் மாநில உதவி பொருளாளர் P4 , 
N.பஞ்சாட்சரம் மாநில தணிக்கையாளர் P4, 
S.வாசுதேவன் மாநில தணிக்கையாளர் P4, 
ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக சென்னை நகர மண்டல செயலாளர் தோழர் S.ஜோதிமணி அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார் 

போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு செய்த நமதருமைத் தலைவர்கள் 
தோழர்  KR  AIPRPA  சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர், 
தோழர் K.ரமேஷ் மாநில செயலாளர் R3,
தோழர் C.குருபாதம் முன்னாள் மாநில செயலாளர் P4, 
தோழர் D.கல்யாணராமன் முன்னாள் மாநில துணை செயலாளர் P4,
தோழர் L.புருசோத்தமன் முன்னாள் மண்டல செயலாளர்P4,
தோழர் D.ஜெயபால் முன்னாள் மாநில உதவி செயலாளர்P4, 
தோழர் G.மனோகரன் முன்னாள் மாநில உதவி தலைவர் P4,  ஆகிய அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக செவ்வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர்களே! 
                  வரலாற்று சிறப்பு மிக்க இப்போராட்டத்திற்கு 500 க்கும் மேற்பட்ட தோழர்களை அணிதிரட்டி வந்த அஞ்சல் நான்கின் தூண்களான அருமை கோட்ட, கிளை செயலாளர்கள் தோழர் R.சீனிவாசன் அண்ணாசாலை, தோழர் J.புருசோத்தமன் GPO, தோழர் S.வேதகிரி வட சென்னை, தோழர் S.ரவிச்சந்திரன் தென் சென்னை, தோழர் R.பரமானந்தம் மத்திய சென்னை, தோழர் G.சுரேஷ் பாபு தாம்பரம், தோழர் P.ரமேஷ் பாபு செங்கல்பட்டு, தோழர் R.முருகன் திருவண்ணாமலை, தோழர் V.சந்தானம் அயல்நாட்டு அஞ்சல், தோழர் P.திருமகன் வெல்லூர், தோழர் N.தனஞ்செழியன் அரக்கோணம், தோழர் R.பாஸ்கர் காஞ்சிபுரம், தோழர் RG.குமார் ராணிபேட்டை, தோழர் அப்துல் ரகுமான் ஆத்தூர், தோழர் M.காசி ஆரணி தோழர் G.இளங்கோவன் சேலம் HO, மாதையன் சேலம் கிழக்கு, உங்கள் அனைவருக்கும் மாநில சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

               இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த சகோதர சங்க நிர்வாகிகளுக்கும் தோழர்களுக்கும் தலைவர்களுக்கும் தமிழ் மாநில அஞ்சல் நான்கு வீர வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. 

                 பேட்ஜ், கோரிக்கை போர்டுகள் கொடி ஆகியவற்றை மிக அருமையாக ஏற்பாடு செய்து இரவு பகலாக உடலுழைப்பை இயக்கத்திற்காக அர்ப்பணித்த தோழர்களுக்கு சிறப்பு வணக்கங்களும் வீர வாழ்த்துக்களும் தோழர்களே!




திரண்டெழுந்த சிங்க கூட்டத்தில் தோழர்  AGP அவர்களின் வீர உரை .


தலைமை உரையாற்றிய மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் .


விண்ணதிரும் கோசங்களை முழங்கிட்ட இனிய தோழர் M.நாராயணன் .



கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்த அருமைத்தோழர் P.திருமகன். 

விளக்க உரை நிகழ்த்திய தோழர் G.கண்ணன். 



 நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் .


 அணிதிரண்ட கூட்டத்தின் ஒரு பகுதி ..



அதிகார வர்க்கத்தை அதிரவைத்த பேருரை - அன்புத்தோழர் S.ரகுபதி .

 நிர்வாகத்தை எச்சரித்த எழுச்சி மிக்க கோசங்கள் ..


நிர்வாகத்தை கண்டித்தும் அஞ்சல் நான்கிற்கு ஆதரவு தெரிவித்தும் வீர உரை நிகழ்த்தும் 
தோழர் B.பரந்தாமன் R4.

வீர உரை நிகழ்த்தும் இனிய தோழர் A.வீரமணி .

எழுச்சி மிகு கண்டன உரையாற்றிய அன்புத்தோழர் ஸ்ரீவி .


RBS ஆ, என அதிர வைத்த முரட்டு உரை  தோழர் RB சுரேஷ் .

இடியாக முழங்கும் அருமைத்தோழர் D.சிவகுருநாதன் . 


கண்டன உரை நிகழ்த்தும் தோழர் A.மணிமேகலை மகிலாகமிட்டி.


கிராமத்து மணம் கமழ  உரைநிகழ்த்திய இனிய தோழர் A.பெருமாள் .


கண்டன உரையாற்றும் இனிய தோழர் S.ரவிச்சந்திரன். 


நிர்வாகத்தை உரத்த குரலில் கண்டித்த அருமைத்தோழர் G.சுரேஷ் பாபு .


 அனைவருக்கும் நன்றி கூறும் அற்புத தோழர் S.ஜோதிமணி .


வெற்றி முழக்கங்களோடு நிறைவடைந்த போராட்டம்.

No comments:

Post a Comment