26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, July 23, 2015

NFPE-P4

அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் 
தபால்காரர் மற்றும் பன்முகதிறன் 
தமிழ் மாநிலம் - சென்னை - 600 005

சுற்றறிக்கை: 7-29/14-16                                                                         தேதி : 23.07.2015


அஞ்சல் நிர்வாகத்தை  அதிரவைத்த 
அஞ்சல் நான்கின் ஆர்ப்பாட்டம்  ...

தோழர்களே! 
                          சென்னை நகர மண்டல அதிகாரி திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்கள் ஊடகங்களின் மூலம் அஞ்சல் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக பத்திரிகைகளுக்கு பேட்டிகொடுத்தும் தொலைகாட்சிகளுக்கு பேட்டி கொடுத்தும் 
அஞ்சல் ஊழியர்களையும் அஞ்சல் இலாகாவையும் இழிவுபடுத்தும் நடவடிக்கையை செய்துவருகிறார். 

                          இவர் பார்வையிட போகிற அலுவலகங்களில் எல்லாம் அளவீடு எதையும் பார்க்காமல் தன்னிச்சையாக ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை தனது இமாலைய சாதனையாக எண்ணி அஞ்சல் ஊழியர்களின் குறிப்பாக தபால்காரர் MTS ஊழியர்களுக்கு வேலை சுமையை அதிகரிக்கிறார் .
                       தபால்காரர்கள் விரைவாக பட்டுவாடாவிற்கு செல்ல வேண்டும் என்கின்ற காரணம் காட்டி, தபால்காரர்களுக்கு கணினியும் கொடுக்காமல் 
அனைத்து பதிவு தபால்களின் முகவரிகளையும் தபால்காரர்களே எழுதிட வேண்டும்  என்று தன்னிச்சையாக உத்திரவு பிறப்பித்ததின் விளைவாக  தபால்காரர்கள் இன்னும் தாமதமாக செல்கிறார்கள். 

                   தபால்காரர்கள் மீது காழ்புணர்ச்சி கொண்டு NFPE  தபால்காரர் சங்க
நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். 

ஆகவே தோழர்களே!!

ஊடகங்களின் மூலம் தபால்காரர்களை கொச்சைப்படுத்தி தபால்துறையை இழிவு படுத்துகின்ற CCR PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களை கண்டித்து 14.07.2015 மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை CPMG அலுவலகத்திற்கு முன்பாக பெரும் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


                       ஆகவே   சென்னை நகர மண்டல அதிகாரி திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களை எச்சரிக்கை செய்கிறோம். அஞ்சல் இலாகாவை 
இழிவுபடுத்தும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திட வேண்டும். தன்னிச்சையான பதவி ஒழிப்பை நிறுத்திட வேண்டும். தொழிற்சங்க விரோத 
நடவடிக்கைகளை கைவிட வேண்டும். 

                  இச்செயல்கள் நீடித்தால் தமிழக அஞ்சல் நிர்வாகம் அமைதி இழந்து 
தமிழகம் போராட்ட களமாக மாறுவதற்கு முழு பொறுப்பும் சென்னை நகர மண்டல அதிகாரி திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களையே சாரும் என்பதை 
தமிழக அஞ்சல் நிர்வாகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம். 

              தோழர்களே! 
                                      இந்நிலை நீடித்தால், 

போராட தயாராவீர் ... 
தொழிலாளர் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை ...
வெகுண்டேழுவோம் தோழா!!

                                                   "வீழ்வோமாயினும் வெல்வோம்"
                                                            "இன்குலாப் ஜிந்தாபாத்"

புரட்சிகர போராட்ட வாழ்த்துக்களுடன், 

G.கண்ணன், 
மாநில செயலாளர்.  

Wednesday, July 22, 2015

NFPE

தோழர்களே!
                       21.07.2015 அன்று மதியம் 2.30 மணி அளவில் அண்ணா சாலை அஞ்சலகத்தில் COC  (NFPE இணைப்புக்குழு ) கூட்டம் நடைபெற்றது.
RJCM தலைவராக தோழர் K.ரமேஷ் மாநிலசெயலாளர் NFPE - R3 அவர்களும் 
COC  ( NFPE இணைப்புக்குழு ) கன்வீனராக தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் P4 அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

Friday, July 17, 2015

2ND SEPTEMBER 2015 STRIKE CHARTER OF DEMANDS

PART-I

1.    Urgent measures for containing price-rise through universalisation of public distribution system and banning speculative trade in commodity market.
2.    Containing unemployment through concrete measures for employment generation.
3.    Strict enforcement of all basic labour laws without any exception or exemption and stringent punitive measure for violation for labour laws.
4.    Universal social security cover for all workers
5.    Minimum wages of not less than Rs. 15,000/- per month with provisions of indexation.
6.    Assured enhanced pension not less than Rs. 3000/- P.M. for the entire working population.
7.    Stoppage of disinvestment in Central/State PSUs.
8.    Stoppage of contractorisation in permanent perennial work and payment of same wage and benefits for contract workers as regular workers for same and similar work.
9.    Removal of all ceilings on payment and eligibility of bonus, provident fund; increase the quantum of gratuity.
10.  Compulsory registration of trade unions within a period of 45 days from the date of submitting applications; and immediate ratification of ILO Convention C 87 and C 98.
11.  Against Labour Law Amendments
12.  Against FDI in Railways, Insurance and Defence.

PART-II

1.    Effect wage revision of the Central Government Employees from 01.01.2014 accepting memorandum of the staff side JCM; ensure 5-year wage revision in future; grant interim relief and merger of 100% of DA; Include Gramin Dak Sevaks within the ambit of 7th CPC. Settle all anomalies of 6th CPC.
2.    Implement Cadre restructuring proposal in all Cadres including MMS.
3.    Implement arbitration awards and revise OTA Rates.
4.    No Privatisation, PPP or FDI in Railways, Defence Establishment and no corporatization of Postal services.
5.    No ban on creation of new posts. Fill up all vacant posts.
6.    Scrap PFRDA Act an re-introduce the defined benefit statutory pension scheme.
7.    No outsourcing, contractrisation, privatization of governmental functions; withdraw the proposed move to close down the printing presses, the publications, form stores and stationery departments and medical stores Depots; regularize the existing daily-rated/casual and contract workers and absorption of trained apprentices.
8.    Revive the JCM functioning at all level as an effective negotiating forum for settlement of the demands of the Central Government Employees.
9.    Remove arbitrary ceiling on compassionate appointment.
10.  No labour reforms which are inimical to the interest of the workers.
11.  Remove the ceiling on payment on bonus

12.  Ensure five promotions in the service career.

Thursday, July 16, 2015


NFPE 

தோழர்களே! 
17.07.2015 நாளை மாலை 5.00 மணி அளவில் சென்னை GPO அஞ்சலகத்தில் 
செப்டம்பர்  02 2015 அன்று நடைபெற இருக்கும் வேலை நிறுத்த விளக்க கூட்டம் 
நடை பெற உள்ளது. 

நமது அகில இந்திய பொது செயலாளர் தோழர் R.சீதாலட்சுமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். 

தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். 
G.கண்ணன், 
மாநில செயலாளர்.

Wednesday, July 15, 2015

NFPE-P4

அஞ்சல் நிர்வாகத்தை  அதிரவைத்த 
அஞ்சல் நான்கின் ஆர்ப்பாட்டம்  ...

ஊடகங்களின் மூலம் தபால்காரர்களை கொச்சைப்படுத்தி தபால்துறையை இழிவு படுத்துகின்ற CCR PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களை கண்டித்து 14.07.2015 மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை CPMG அலுவலகத்திற்கு முன்பாக பெரும் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை வகித்தார். 

அஞ்சல் நான்கின் அகில இந்திய உதவி செயலாளர் தோழர் P.திருமகன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். 

அஞ்சல் நான்கின் தமிழ் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் கோரிக்கைகளை விளக்கி உரை நிகழ்த்தினார். 

அஞ்சல் நான்கின்  முன்னாள் தமிழ் மாநில செயலாளரும் தமிழக அஞ்சல் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் AGP அவர்கள் நீண்ட கண்டன உரை நிகழ்த்தினார். 

நமது சம்மேளனத்தின் உதவி பொதுச்செயலாளர் தோழர் S.ரகுபதி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். 

மற்றும் தோழர்கள், 
B.பரந்தாமன் தலைவர்  - மாநில செயலாளர் R4, 
A.வீரமணி அகில இந்திய உதவி பொது செயலாளர் P3,
J.ஸ்ரீவெங்கடேஷ் மாநில தலைவர் P3, 
RB.சுரேஷ் மாநில செயலாளர் A3,
D.சிவகுருநாதன் மாநில தலைவர் கேசுவல் ஊழியர் சங்கம், 
A.மணிமேகலை மகிலா கமிட்டி தமிழ் மாநிலம் P3,
A.பெருமாள் முன்னாள் மாநில உதவி தலைவர் P4,
S.ரவிச்சந்திரன் மாநில பொருளாளர் P4,
M.நடராஜன் மாநில உதவி தலைவர் P4,
G.சுரேஷ் பாபு மாநில உதவி செயலாளர் P4, 
R.பரமானந்தம் மாநில உதவி பொருளாளர் P4 , 
N.பஞ்சாட்சரம் மாநில தணிக்கையாளர் P4, 
S.வாசுதேவன் மாநில தணிக்கையாளர் P4, 
ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக சென்னை நகர மண்டல செயலாளர் தோழர் S.ஜோதிமணி அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார் 

போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு செய்த நமதருமைத் தலைவர்கள் 
தோழர்  KR  AIPRPA  சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர், 
தோழர் K.ரமேஷ் மாநில செயலாளர் R3,
தோழர் C.குருபாதம் முன்னாள் மாநில செயலாளர் P4, 
தோழர் D.கல்யாணராமன் முன்னாள் மாநில துணை செயலாளர் P4,
தோழர் L.புருசோத்தமன் முன்னாள் மண்டல செயலாளர்P4,
தோழர் D.ஜெயபால் முன்னாள் மாநில உதவி செயலாளர்P4, 
தோழர் G.மனோகரன் முன்னாள் மாநில உதவி தலைவர் P4,  ஆகிய அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக செவ்வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர்களே! 
                  வரலாற்று சிறப்பு மிக்க இப்போராட்டத்திற்கு 500 க்கும் மேற்பட்ட தோழர்களை அணிதிரட்டி வந்த அஞ்சல் நான்கின் தூண்களான அருமை கோட்ட, கிளை செயலாளர்கள் தோழர் R.சீனிவாசன் அண்ணாசாலை, தோழர் J.புருசோத்தமன் GPO, தோழர் S.வேதகிரி வட சென்னை, தோழர் S.ரவிச்சந்திரன் தென் சென்னை, தோழர் R.பரமானந்தம் மத்திய சென்னை, தோழர் G.சுரேஷ் பாபு தாம்பரம், தோழர் P.ரமேஷ் பாபு செங்கல்பட்டு, தோழர் R.முருகன் திருவண்ணாமலை, தோழர் V.சந்தானம் அயல்நாட்டு அஞ்சல், தோழர் P.திருமகன் வெல்லூர், தோழர் N.தனஞ்செழியன் அரக்கோணம், தோழர் R.பாஸ்கர் காஞ்சிபுரம், தோழர் RG.குமார் ராணிபேட்டை, தோழர் அப்துல் ரகுமான் ஆத்தூர், தோழர் M.காசி ஆரணி தோழர் G.இளங்கோவன் சேலம் HO, மாதையன் சேலம் கிழக்கு, உங்கள் அனைவருக்கும் மாநில சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

               இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த சகோதர சங்க நிர்வாகிகளுக்கும் தோழர்களுக்கும் தலைவர்களுக்கும் தமிழ் மாநில அஞ்சல் நான்கு வீர வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. 

                 பேட்ஜ், கோரிக்கை போர்டுகள் கொடி ஆகியவற்றை மிக அருமையாக ஏற்பாடு செய்து இரவு பகலாக உடலுழைப்பை இயக்கத்திற்காக அர்ப்பணித்த தோழர்களுக்கு சிறப்பு வணக்கங்களும் வீர வாழ்த்துக்களும் தோழர்களே!




திரண்டெழுந்த சிங்க கூட்டத்தில் தோழர்  AGP அவர்களின் வீர உரை .


தலைமை உரையாற்றிய மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் .


விண்ணதிரும் கோசங்களை முழங்கிட்ட இனிய தோழர் M.நாராயணன் .



கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்த அருமைத்தோழர் P.திருமகன். 

விளக்க உரை நிகழ்த்திய தோழர் G.கண்ணன். 



 நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் .


 அணிதிரண்ட கூட்டத்தின் ஒரு பகுதி ..



அதிகார வர்க்கத்தை அதிரவைத்த பேருரை - அன்புத்தோழர் S.ரகுபதி .

 நிர்வாகத்தை எச்சரித்த எழுச்சி மிக்க கோசங்கள் ..


நிர்வாகத்தை கண்டித்தும் அஞ்சல் நான்கிற்கு ஆதரவு தெரிவித்தும் வீர உரை நிகழ்த்தும் 
தோழர் B.பரந்தாமன் R4.

வீர உரை நிகழ்த்தும் இனிய தோழர் A.வீரமணி .

எழுச்சி மிகு கண்டன உரையாற்றிய அன்புத்தோழர் ஸ்ரீவி .


RBS ஆ, என அதிர வைத்த முரட்டு உரை  தோழர் RB சுரேஷ் .

இடியாக முழங்கும் அருமைத்தோழர் D.சிவகுருநாதன் . 


கண்டன உரை நிகழ்த்தும் தோழர் A.மணிமேகலை மகிலாகமிட்டி.


கிராமத்து மணம் கமழ  உரைநிகழ்த்திய இனிய தோழர் A.பெருமாள் .


கண்டன உரையாற்றும் இனிய தோழர் S.ரவிச்சந்திரன். 


நிர்வாகத்தை உரத்த குரலில் கண்டித்த அருமைத்தோழர் G.சுரேஷ் பாபு .


 அனைவருக்கும் நன்றி கூறும் அற்புத தோழர் S.ஜோதிமணி .


வெற்றி முழக்கங்களோடு நிறைவடைந்த போராட்டம்.

Thursday, July 9, 2015

NFPE-P4

சென்னை மத்திய கோட்ட சங்கத்தின் அஞ்சல் நான்கின் மாநாடு 
28.06.2015 
தியாகராய நகர் தலைமை அஞ்சலகம். 

கோட்ட மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர் தோழர் M.நாராயணன் தபால்காரர் திருவல்லிக்கேணி SO.
செயலாளர் தோழர் R.பரமானந்தம் ME தி.நகர் HO.
பொருளாளர் தோழர் S.சம்பத் தபால்காரர் நுங்கம்பாக்கம் SO.

கொடியேற்றும் நிகழ்ச்சி  



தியாகிகள் ஸ்தூபி 


மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் வீர வணக்கம் செலுத்தும் காட்சி 


மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் வாழ்த்துரை 



மாநில சங்கத்தின் சார்பாக புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தல் 



மத்திய அரசு ஊழியர் மகாசமமேளன மாநில செயலர் தோழர் M.துரைபாண்டியன் அவர்களுக்கு மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தல் .



மற்றும் மாநாட்டு நிகழ்சிகள் ....