26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, January 20, 2017

NFPE P4

NFPE மற்றும் AIPEU GDS NFPE  சங்கங்களின் தொடர் போராட்டங்களினால் தற்பொழுது கிடைத்த ஊதியக்குழு அறிக்கை....

GDS ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை , பலத்த போராட்டத்திற்கு பின் வெளியிடப்பட்டுள்ளது. சரியாக  434 பக்கங்களும்,  20 தலைப்புகளுடன் 39 ANNEXURE கள்  கொண்ட அறிக்கையை திரு கமலேஷ் சந்திரா அவர்கள் அரசிடம் ஒப்படைத்துள்ளார்கள். தற்பொழுது நமக்கு தேவையான, முக்கிய பகுதிகளை  மட்டும் தமிழில் தருகிறோம்.

இந்த அறிக்கையில் ...
பதவிகளின் பெயர் திருத்தம்.
1.BPM --- அனைத்து BPM களும் இப்பொழுதும் BPM என்று அழைக்கப்படுவார்கள்.

2. ASSISTANT BPM---- ஏற்கனவே GDS MD, MC, ஆகியோர்கள் ASST. BPM என்று அழைக்கப்படுவார்கள்.

3. DAK.SEVAK--- GDS/SV, GDS/PKR மற்றும் GDS/MM ஆகியோர்கள் DAK.SAVAK என்று அழைக்கப்படுவார்கள்.

GDS அஞ்சலகங்கள்:
GDS அஞ்சலகங்களுக்கு புதிய கணக்கீட்டு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
GDS அஞ்சலகங்கள் வருமானம் மற்றும் செலவீனங்கள் அடிப்படையில் தரம் பிரிக்கப்படும்.

ஊதியம் நிர்ணயிக்கும் முறை;
புள்ளி அடிப்படையிலான பணிச்ச்சுமை கணக்கீட்டுக்கு பதிலாக அலுவலக வருமானத்தின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

GDS ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பை அதிகரிப்பது, அவர்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அதோடு அவர்களின் வருமானத்தை அதிகப்படுத்தி அவர்கள் GDS அமைப்புக்குள்ளேயே சந்தோசமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

GDS ஊழியர்களும் இலாக்கா ஊழியர் போலவே ஓய்வு பெரும் நாள் மாதத்தின்  கடைசி நாளாக இருக்கவேண்டும்.
விருப்பத்தின் அடிப்படையில் இடம் மாறுதல் ஆண்களுக்கு மூன்று முறையாகவும், பெண்களுக்கு காலக்கெடு தேவையில்லை எத்தனை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர். இட மாற்ற உத்திரவு SSP அவர்களே போடலாம்.

ஊதியம் மற்றும் ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த பரிந்துரைகள்;
குறைந்த பட்ச பணிநேரம் 4 மணி நேரமும் அதிக பட்சம் 5 மணி நேரமும்  ஆகும்.

குறைந்த பட்ச ஊதியம்;
LEVAL 1  4 மணி நேரம் ; ரூபாய் 10000/ இது DAK.SAVAK & ASSISTANT BPM

LEVAL 2  5 மணி நேரம் ; ரூபாய் 12000/  இது DAK.SAVAK & ASSISTANT BPM

LEVAL 1  4 மணி நேரம் ; ரூபாய் 12000/ இது BPM

LEVAL 2  5 மணி நேரம் ; ரூபாய் 14500/ இது BPM

ஆண்டு ஊதிய உயர்வு அடிப்படை ஊதியத்தில் 3% (INCREMENT) 1ST ஜனவரி அல்லது 1ST ஜூலை யில் கொடுக்கவேண்டும்.

ஊதிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது;










படிகள்;
DA தற்போதுள்ள நிலை தொடரவேண்டும்..
பல்வேறு படிகளை இணைத்து COMPOSITE ALLOWANCE என்ற புதிய படியை அறிமுகம் செய்துள்ளார்.

CASH HANDLING ALLOWANCE, COMBINED DUTY ALLOWANCE இவைகள் தொடர்வதோடு புதிதாக CHILDREN EDUCATION ALLOWANCE ஒரு குழந்தைக்கு 6000/ ஓராண்டிற்கு வழங்க பரிந்துரைத்துள்ளனர்.
BPM களுக்கு வருமானத்தோடு இணைக்கப்பட்ட படி கொடுக்க பரிந்துரை..
RISK AND HARDSHIP ALLOWANCE PER MONTH RS 500/ .

ஒழிக்கப்பட்ட படிகள் ;
1. சைக்கிள் படி
2. FAC
3.BOAT ALLOWANCE
4 OMA .

பணித்திறனோடு இணைக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை தகுதியானவர்களுக்கு ஒவ்வொரு மாத இறுதியிலும் வழங்கிட பரிந்துரை ...

போனஸ் ;
வருமானத்தோடு இணைந்த போனஸ் வழங்கப்பட வேண்டும் ...

செக்யூரிட்டி பாண்டு முறையை ஒளித்து விட்டு ஐந்து வருட TD AC அல்லது NSC வாங்க வேண்டும் என பரிந்துரை ...

பதவி உயர்வு ;
1. POSTMAN MTS பதவிகளில் GDS ஊழியர்களுக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்க பரிந்துரை ..
2. ஓராண்டு பணிமுடித்தாலே தேர்வு எழுத அனுமதி ...
3. 12, 24, 36 ஆண்டு கால பணி முடித்த ஊழியர்களுக்கு 2 ஆண்டு INCREMENT கொடுக்க பரிந்துரை ..

ஒவ்வொரு நிதிப்பலன் உயர்வுக்கு பிறகும் GDS ஊழியர்களுக்கான பதவி பெயர் மாற்றப்பட வேண்டும்.

விடுப்பு ;
ஏற்கனவே இருக்கக்கூடிய 20 நாட்கள் லீவை 30 நாட்களாக உயர்த்தி பரிந்துரைத்துள்ளார். இந்த லீவுக்கு சாதாரண விடுப்பு என்று பெயர் ...
இந்த விடுப்பை பணமாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளார்.

மற்றும் அவசர விடுப்பு ஆண்டுக்கு 5 நாட்கள்  பரிந்துரைத்துள்ளார்.

பெண் GDS ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள் கொடுக்க வேண்டும். அதற்கான ஊதியத்தை இலாக்காவே வழங்க வேண்டும். (WELFARE ல் அல்ல)
ஆண் ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுப்பு குழந்தை பெற்ற மனைவியை பராமரிக்க ..

சமூக பாதுகாப்பு திட்டம்;
SEVERANCE AMOUNT 1.1.2016 முதல் பணி முடித்த ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூபாய் 4000/ என்ற அடிப்படையில் அதிகபட்சம் ரூபாய் 1,50,000/ வழங்க பரிந்துரை ..

GDS பென்ஷன் திட்டம் ; ( SDBS .. SERVICE DISCHARGE BENEFIT SCHEME) :
இத்திட்டத்தில் GDS ஊழியர்களின் பங்களிப்பு அடிப்படை ஊதியத்தில் 3% முதல் 10% வரை போடவேண்டும். இலாக்கா பங்களிப்பு 3% ஆக இருக்க வேண்டும் என பரிந்துரை ..

பணி கொடை ; GRATUITY ACT.
GDS ஊழியர்களுக்கும் பணிக்கொடை சட்டத்தின் கீழ் அதிக பட்ச உச்ச வரம்பாக ரூபாய் 50000/ ஐந்து லட்சம் நிர்ணயிக்கப்பட வேண்டும்..

குழு காப்பீட்டு திட்டம் ; GROUP INSURANCE ;
மாதம் ரூபாய் 500/ GDS ஊழியர்களிடம் பிடித்தம் செய்து ரூபாய் 500000/ ஐந்து லட்சத்திற்கு குழு காப்பீடு செய்ய வேண்டும் ..

சேம நல திட்டம் ;
GDS சேம நலத்திட்ட சந்தா மாதம் ரூபாய் 20 ல் இருந்து 100/ ஆக உயர்த்தப்பட வேண்டும்.
இதில் இலாகா பங்காக ஆண்டிற்கு ரூபாய் 100/ என்பது 300/ மாற்றப்பட வேண்டும்..
GDS ஊழியர்கள்  குழந்தைகளின் கருணை அடிப்படையிலான பணிக்கு புள்ளிகள் முறை கைவிடப்பட வேண்டும்.

அனைத்து ஊழியர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமுலாக்குவதற்கும், மோசமான பரிந்துரைகளை களைவதற்கும் ,
நாம் வருட கணக்கில் போராடிக்கொண்டுள்ள இலாகா அந்தஸ்து மற்றும் பென்ஷன் ஆகியவைகளை பெற்றிடவும் தயாராவோம் .. போராட்டம் ஒன்றே வழி ...

தோழமையுடன் ,
G.கண்ணன் ,
மாநில செயலாளர்.  





Friday, December 2, 2016

மாநில மாநாடு மற்றும் மாநில செயற்குழுவிற்கான அறிவிப்பு:


Thursday, November 17, 2016

NFPE - FNPO - PJCA.
கோட்ட/கிளை செயலாளர்கள் கவனத்திற்கு:

18.11.2016 - நாளை தமிழகம் முழுவதும் அனைத்து கோட்ட/கிளை அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்.

கோரிக்கைகள்:
1. 500 மற்றும் 1000 ரூபாய் பண மாற்று பரிவர்த்தனை தொடர்பாக ஊழியர்களுக்கு ஏற்ப்படும் இன்னல்களை களையக் கோரி...

2. ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் அஞ்சல் ஊழியர்களை பணிக்கு வரவழைத்து பட்டுவாடா பண்ண சொல்லி கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்தக்கோரி...

நோட்டீஸ் போட நேரமின்மையால் இதையே நோட்டீஸாக எடுத்துக் கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச்செய்வீர்!!
போராட்ட வாழ்த்துக்களுடன்
G.கண்ணன்,
கன்வீனர்,
COC - NFPE.

Wednesday, November 16, 2016

தோழர்களே!
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பரிமாற்ற வேலைகள் சம்பந்தமாக நமது அஞ்சல் இலாகாவில் சரியான திட்டம் இல்லாமலும்,  ஊழியர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்காமலும் ஏற்படும் கஷ்டங்களை தீர்க்க கோரி CPMG TN CIRCLE அவர்களுக்கு நமது மாநில சங்கத்தின் சார்பாக எழுதிய கடித நகல்...

No.P4/Currency Notes/Exchange                                                                                    Date:16.11.16


To,

The Chief Postmaster General,

Tamil Nadu Circle,

Chennai 600 002.



Respected Sir,



Sub:  Carrying out the National Duty of Exchange of demonetized currency notes in the denominations of Rs.500/- and Rs.1000/- and the need to beef up the security with upgraded infrastructure – reg.

            -------------------------------------



We, while extending our fullest cooperation with dedicated service with regard to the above mentioned subject, would like to bring to your kind notice the following points for favour of your kind notice for speedy and needy action.



With profound pride and prestige we, the postal employees are fully extending our fullest cooperation in carrying our National duty of exchange of demonetized currency notes as announced by our Hon’able Prime Minister.  It is a matter of pride that our Post offices are doing this greatest service along with the Banks and as a member of this prestigious Postal department chosen by our Hon’able PM ji himself to do this very important national duty.  The unprecedented crowd gathered at Post Offices make us not only proud but also establishes our importance in the Society in its important moments. While performing the national duty entrusted to us by the Government, we would like to point out certain important things that need to be addressed by our administration.



1]         Though it is of paramount important for our employees to perform this duty including Sundays and Holidays, it is pertinent to note that the employees of the selected offices have to stretch beyond stretchable limits by straining every nerve from dawn to not dusk but to dark.  Starting from early in the morning and working beyond late hours in the nights make them physically and mentally drained.  While, our brethren in banks are given suitable monetary compensation with all infrastructural benefits with suitable police escorts, we, the postal employees have to toil in the absence of such facilities.  The unprecedented crowd make the atmosphere stressful for want of sufficient number of hands and proper infrastructure.  Our staff have to sit in the streets, verandahs and in public halls that lack in security and safety to render this important service.  Hence, it is requested that arrangements with safety and security may be arranged temporarily and armed escort must be provided.  To relieve the same set of employees from undue stress and strain the employees of administrative offices and other offices that are not earmarked for exchange of notes may be brought on duty on rotation basis.



2]        The non-supply of fake note detecting/counting machines multiplies the risk involved in the job as fake currency are freely in circulation as per the reports of the Government itself.  To safeguard our innocent employees from the clutches of such anti-social elements circulating such fake currency notes, the fake-note-detecting and counting machines may be supplied to all post offices without delay.  The available number of such machines are inadequate and many offices do not have any.  Action on war-footing is highly solicited.



3]        The transit of huge volumes of such currency between SOs and HOs and from HOs and authourised banks has become a head-ache.  The crores of rupees collected needs to be transmitted safely to its destination.  This needs to be immediately attended to by providing armed police escorting the transit of heavy cash remittance.



4]        By incurring incidental expenses, the refreshments for the employees working from 6.30 am to midnights may be provided as being done in various banks.  In the name of austerity, this minimum requirement of employees need not be denied.



5]        The control rooms established in HOs, DOs and ROs need to act in unison with that of CO so that uniform guidelines are given to the employees of SB branch and money-exchange counters.  The different guidelines/instructions given by different persons manning different control rooms make the employees confused and the lack of uniformity in instructions give rise to chaos resulting in dipping the morale of employees.



6]        It is requested that for the extra hours of work performed on everyday may be suitably compensated monetarily as being done in banks, the work performed on Sundays and holidays may be compensated by Compensatory Off.



We solicit your immediate intervention in this matter.



Thanking you,



Yours faithfully,



G. KANNAN,

Circle Secretary.
AIPEU PM & MTS,
Tamilnadu circle,
Chennai - 600 014

Tuesday, November 8, 2016

NFPE P4.

7வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடகோரி..
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பில் இன்று 07.11.2016  இரண்டாவது கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் தலைநகர் சென்னையில் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் தலைமை உரையுடன் ஆரம்பமானது.

மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் தோழர் மணிஆச்சாரி அவர்கள் துவக்கவுரையாற்றினார்.
அடுத்ததாக தோழர்கள் RB.சுரேஷ் அ.இ.அமைப்பு செயலாளர், தோழர் பாலசுந்தரம் மாநில உதவி செயலாளர், S.ரகுபதி NFPE சம்மேளன உதவி மா பொது செயலாளர், M.துரைப்பாண்டியன் மாநில செயலாளர், G.கண்ணன் கன்வீனர் NFPE COC மற்றும் பல அரங்கத்தை சார்ந்த தோழர்கள் கோரிக்கைகளின் முக்கியத்துவம் பற்றியும், போராட்டத்தின் தீவிரம் பற்றியும் விளக்கிப் பேசினார்கள். இறுதியாக ம.அ.ஊ.மகா சம்மேளனத்தின் மாநில பொருளாளர் தோழர் வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறி முடித்தார்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.













NFPE P4.

7வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடகோரி..
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பில் இன்று 07.11.2016  இரண்டாவது கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் தலைநகர் சென்னையில் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் தலைமை உரையுடன் ஆரம்பமானது.

மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் தோழர் மணிஆச்சாரி அவர்கள் துவக்கவுரையாற்றினார்.
அடுத்ததாக தோழர்கள் RB.சுரேஷ் அ.இ.அமைப்பு செயலாளர், தோழர் பாலசுந்தரம் மாநில உதவி செயலாளர், S.ரகுபதி NFPE சம்மேளன உதவி மா பொது செயலாளர், M.துரைப்பாண்டியன் மாநில செயலாளர், G.கண்ணன் கன்வீனர் NFPE COC மற்றும் பல அரங்கத்தை சார்ந்த தோழர்கள் கோரிக்கைகளின் முக்கியத்துவம் பற்றியும், போராட்டத்தின் தீவிரம் பற்றியும் விளக்கிப் பேசினார்கள். இறுதியாக ம.அ.ஊ.மகா சம்மேளனத்தின் மாநில பொருளாளர் தோழர் வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறி முடித்தார்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.












Tuesday, November 1, 2016

31.07.2016 தேதியில் தபால்காரர் & MTS  பதவியிலிருந்து எழுத்தர் பதவிக்கு தேர்வு எழுதி, தேர்வு பெற்றவர்களில் முதல் பட்டியலில் பெயர் வெளியாகி பயிற்சிக்கு போனவர்கள் போக உபரியாக உள்ள மற்ற தபால்காரர் & MTS ஊழியர்களையும் காலியாக உள்ள மற்ற இடங்களில் பணியமர்த்த கோரி NFPE P4 தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக 22.10.2016 அன்று CPMG அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகல்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.