26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, July 23, 2015

NFPE-P4

அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் 
தபால்காரர் மற்றும் பன்முகதிறன் 
தமிழ் மாநிலம் - சென்னை - 600 005

சுற்றறிக்கை: 7-29/14-16                                                                         தேதி : 23.07.2015


அஞ்சல் நிர்வாகத்தை  அதிரவைத்த 
அஞ்சல் நான்கின் ஆர்ப்பாட்டம்  ...

தோழர்களே! 
                          சென்னை நகர மண்டல அதிகாரி திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்கள் ஊடகங்களின் மூலம் அஞ்சல் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக பத்திரிகைகளுக்கு பேட்டிகொடுத்தும் தொலைகாட்சிகளுக்கு பேட்டி கொடுத்தும் 
அஞ்சல் ஊழியர்களையும் அஞ்சல் இலாகாவையும் இழிவுபடுத்தும் நடவடிக்கையை செய்துவருகிறார். 

                          இவர் பார்வையிட போகிற அலுவலகங்களில் எல்லாம் அளவீடு எதையும் பார்க்காமல் தன்னிச்சையாக ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை தனது இமாலைய சாதனையாக எண்ணி அஞ்சல் ஊழியர்களின் குறிப்பாக தபால்காரர் MTS ஊழியர்களுக்கு வேலை சுமையை அதிகரிக்கிறார் .
                       தபால்காரர்கள் விரைவாக பட்டுவாடாவிற்கு செல்ல வேண்டும் என்கின்ற காரணம் காட்டி, தபால்காரர்களுக்கு கணினியும் கொடுக்காமல் 
அனைத்து பதிவு தபால்களின் முகவரிகளையும் தபால்காரர்களே எழுதிட வேண்டும்  என்று தன்னிச்சையாக உத்திரவு பிறப்பித்ததின் விளைவாக  தபால்காரர்கள் இன்னும் தாமதமாக செல்கிறார்கள். 

                   தபால்காரர்கள் மீது காழ்புணர்ச்சி கொண்டு NFPE  தபால்காரர் சங்க
நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். 

ஆகவே தோழர்களே!!

ஊடகங்களின் மூலம் தபால்காரர்களை கொச்சைப்படுத்தி தபால்துறையை இழிவு படுத்துகின்ற CCR PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களை கண்டித்து 14.07.2015 மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை CPMG அலுவலகத்திற்கு முன்பாக பெரும் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


                       ஆகவே   சென்னை நகர மண்டல அதிகாரி திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களை எச்சரிக்கை செய்கிறோம். அஞ்சல் இலாகாவை 
இழிவுபடுத்தும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திட வேண்டும். தன்னிச்சையான பதவி ஒழிப்பை நிறுத்திட வேண்டும். தொழிற்சங்க விரோத 
நடவடிக்கைகளை கைவிட வேண்டும். 

                  இச்செயல்கள் நீடித்தால் தமிழக அஞ்சல் நிர்வாகம் அமைதி இழந்து 
தமிழகம் போராட்ட களமாக மாறுவதற்கு முழு பொறுப்பும் சென்னை நகர மண்டல அதிகாரி திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களையே சாரும் என்பதை 
தமிழக அஞ்சல் நிர்வாகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம். 

              தோழர்களே! 
                                      இந்நிலை நீடித்தால், 

போராட தயாராவீர் ... 
தொழிலாளர் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை ...
வெகுண்டேழுவோம் தோழா!!

                                                   "வீழ்வோமாயினும் வெல்வோம்"
                                                            "இன்குலாப் ஜிந்தாபாத்"

புரட்சிகர போராட்ட வாழ்த்துக்களுடன், 

G.கண்ணன், 
மாநில செயலாளர்.  

No comments:

Post a Comment