26.03.2015 ONE DAY STRIKE News Flash

Wednesday, June 10, 2015

NFPE-P4

புதிய சங்க அங்கீகார விதியின்படி உறுப்பினர் சேர்ப்பு. 

06.07.2015 இறுதி நாள் .. 
தோழர்களே இன்றே களம் இறங்குவீர்!!!
அனைத்து உறுப்பினர்களையும் போர்குணம் மிக்க நமது  NFPE சங்கத்தில் இன்றே இணைத்திடுவீர்!!!

புறப்படு தோழா!! வீருகொண்டெழு தோழா !!!

அஞ்சல் நான்கின் வீரமிக்க கோட்ட செயலாளர்களே !! உங்களின் கவனத்திற்கு!!!

உறுப்பினர் படிவத்தை கோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பது சம்பந்தமாக ..

* DIRECTOR SR  9.6.2015 Annexure 1 ல் கையெழுத்திட்ட  படிவத்தில் மட்டுமே உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். 

* 06.07.2015 தேதிக்கு முன்பாக அனைத்து உறுப்பினர்களிடமும் கையெழுத்து வாங்கிவிட வேண்டும்.

* கையெழுத்து வாங்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை கோட்ட கண்காணிப்பாளரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். 

* உறுப்பினர் படிவங்களுடன் உறுப்பினர் பட்டியலையும் இணைத்து ஒப்படைக்க வேண்டும். 

* 06.07.2015 அன்று கண்டிப்பாக உறுப்பினர் பட்டியலை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும். 

* உறுப்பினர்களிடம் மூன்று படிவங்களில் கையெழுத்து வாங்க வேண்டும்.

* அது போலவே மூன்று உறுப்பினர் படிவத்திலும் கோட்ட செயலாளர்கள் கையெழுத்திட வேண்டும். 

* உறுப்பினர் பட்டியல் நான்கு தயார் செய்து நான்கு படிவங்களிலும் கோட்ட செயலாளர்கள் கையெழுத்திட வேண்டும். 

* நான்கு உறுப்பினர்  பட்டியலில் மூன்று உறுப்பினர்  பட்டியலை கோட்ட கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் . ஒரு உறுப்பினர் பட்டியலில் கோட்ட கண்காணிப்பாளரிடம் கையெழுத்து பெற்று கோட்ட செயலாளர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவே நாம் கொடுத்ததற்கான அத்தாட்சி..

விரைந்து செயல்படுவீர்...
தோழமை வாழ்த்துக்களுடன் ...

G.கண்ணன் 
மாநில செயலாளர் 
AIPEU PM & MTS 
தமிழ் மாநிலம் 
சென்னை - 14

No comments:

Post a Comment