26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, December 11, 2015

NFPE-P4

தமிழக அஞ்சல் ஊழியர்கள் - 
வெள்ள நிவாரண பணிக்குழு 
சென்னை - 600 005

தோழர்களே,
                         தமிழகம் வெள்ளம் சூழ்ந்த சூழ்நிலையில்  உள்ளது. அஞ்சல் ஊழியர்களும் இதற்க்கு விதிவிலக்கில்லை. நமக்கு 2, 3, 4 - 12 -2015 ஆகிய  3 நாட்களுக்கு, 
                       பணிக்கு வராதவர்களுக்கு சிறப்பு விடுப்பும், பணிக்கு வந்தவர்களுக்கு C OFF ம் கொடுக்கும் படி உத்திரவு வந்துள்ளது. 
                       அதே போல FLOOD ADVANCE வழங்குவதற்கான உத்திரவும் வந்து விடும். 

                     ஆனால் எந்த உதவியும் இல்லாமல் நடுத்தெருவில், வீடின்றி, உணவின்றி ஏக்கமாய், அநாதரவாக நிற்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கு நாம் ஏதாவது செய்திட வேண்டும் என்ற நோக்கத்தில், நமது அஞ்சல் ஊழியர்களுக்கும் மனிதாபம் உண்டு என்ற அடிப்படையில்,
"தமிழக அஞ்சல் ஊழியர்கள் - வெள்ள நிவாரண பணிக்குழு" என்ற பெயருடன் 
வெள்ள நிவாரண பணியை துவக்கியுள்ளோம். 

                      துவக்கிய உடன் முதல் நிதியாக,
 தோழியர் B.ஹேமா மகேஸ்வரி,
PA, திருவல்லிக்கேணி SO
சென்னை - 600 005 
                     அவர்கள் ரூபாய் 25,000/  யை  NFPE-P4 தமிழ் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்களிடம் வழங்கினார். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

தோழியர் B.ஹேமா மகேஸ்வரி அவர்களுக்கு மனிதம் அதிகம். 

                   அதே போல் முதலாவதாக 49 பெட் சீட்டுக்களை அனுப்பிய பாண்டிச்சேரி கோட்டத்திற்கும், மாநில தலைவர் தோழர் M.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.  

                   சென்னை மத்திய கோட்டம் 200 குடங்களை வழங்கியது. அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

                   தென் சென்னை கோட்டம் 200 குடும்பங்களுக்கான பலசரக்கு பொருட்களை வசூல் செய்துள்ளார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். 

                   பொருட்களை அனுப்ப வேண்டியவர்கள் 14.12.15 க்குள் அனுப்பி வைக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் .
G.கண்ணன்,
கன்வீனர், 
தமிழக அஞ்சல் ஊழியர்கள் - 
வெள்ள நிவாரண பணிக்குழு 
சென்னை - 600 005


No comments:

Post a Comment