26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, August 21, 2015

NFPE

கோவை கோட்டம் வழிகாட்டுகிறது.

புதிதாக நியமனம் பெற்று தபால்காரர்களாக பணியாற்ற வருகை தந்துள்ள 24 இளம் தோழர்களை வரவேற்கும் முகத்தான் கோவை கோட்ட சங்கம் முன்முயற்சி எடுத்து ஸ்தல மட்ட மருத்துவ பரிசோதனை உள்ளிட்டு அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறது. அவர்களுக்கு கீழ்க்கண்ட வரவேற்ப்பு மடலையும் ஒரு சிறிய பரிசினையும் அளித்து  
வரவேற்றுள்ளது. 

       புதிய நியமன இளம் தோழர்களை வரவேற்கும் வகையில் கோவை 
கோட்ட சங்கம் எடுத்த இந்நல்ல முயற்சி அனைவருக்கும் வழிகாட்டுவதாக  அமைந்திருக்கிறது. தோழர் K.மகேந்திரன் (கோட்ட தலைவர்)  மற்றும் H.ஸ்ரீதரன் (கோட்ட செயலர் ) S.ராதாகிருஷ்ணன் (கோட்ட பொருளாளர்) உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் முன்னாள் மாநில சங்க நிர்வாகி தோழர் S.கருணாநிதி அவர்களையும் மாநில சங்கம் மனதார பாராட்டுகிறது. 



(குறிப்பு: இது போன்ற நிகழ்சிகள் வேறு ஏதேனும் கோட்ட கிளை சங்கங்களில் எடுத்திருந்தால் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் நமது இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும்)

No comments:

Post a Comment