26.03.2015 ONE DAY STRIKE News Flash

Sunday, August 30, 2015

2015 செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் நடைபெறுவது உறுதி 


வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க ஒற்றுமையுடன் முன்னேறுவீர் ! 

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல்.


         நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான அமைச்சர்கள் குழுவுடன் அனைத்து மத்திய தொழிற்சங்ககளும் 2015 ஆகஸ்ட் 26, 27 அன்று 12 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. 

        அதன் பின்னர் அரசு கொடுக்கின்ற வாக்குறுதிகள் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு 26 மற்றும் 27 ஆகஸ்ட் அன்று நிதியமைச்சர் வேண்டுகோள்விடுத்தார் .

          இதை தொழிற்சங்ககளும் ஏற்றுக்கொண்டதாக நிதியமைச்சர் கூறியது தவறான தகவல் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

          2009 ஆம்  ஆண்டிலிருந்தே அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுடைய கூட்டமைப்பு அடிப்படையான கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி வருவதோடு மட்டும் அல்லாமல், 2010 இல் இருந்து, பிப்ரவரி 2013 இரண்டு நாள் வேலை நிறுத்தம் உட்பட மூன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தங்களை நடத்தி இருக்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற இரண்டு சுற்று பேச்சு வார்த்தையில் அமைச்சர்கள் குழுவால் உறுதியான நடவடிக்கைகள் அறிவிக்கப்படவில்லை, மாறாக அமைச்சர்கள் கூறியதெல்லாம் சரியான வழியில் செல்லாத வெற்று அறிவிப்புக்கள் மட்டுமே.

         வேலைநிறுத்த கோரிக்கைகள் குறித்து அரசு வெளியிட்ட தவறான பத்திரிக்கை செய்திகுறிப்பு 


  கட்டாயமான மற்றும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய குறைந்தபட்ச  கூலிக்கான,  சட்ட முன்வரைவு அரசால் தெரிவிக்கப்பட்டது. 2012, 44வது இந்திய தொழிலாளர் மாநாடு மற்றும் 2015 ஜூலையில்  நடைபெற்ற 46 வது  தொழிலாளர் மாநாட்டில் தொழிற்சங்கங்களினால் பரிந்துரை செய்யப்பட்டு, மத்தியஅரசும் ஏற்றுக் கொண்டகுறைந்தப்பட்ச  
கூலிக்கான சூத்திரம் குறித்து அமைச்சர்கள் உறுதியான உத்திரவாதம் கொடுக்கவில்லை.  2012 மற்றும் 2015 இல் நடைபெற்ற இந்திய தொழிலாளர்  மாநாட்டில்  2014 ஆம்  ஆண்டு விலைவாசி அடிப்படையில் ரூபாய் 20000/- ILC யால் (INDIAN LABOUR CONFERENCE) பரிந்துரை செய்யப்பட்டது. இதிலும் தொழிற்சங்கங்கள் கேட்டது ரூபாய் 15000/- மட்டுமே. அமைச்சர்கள் அளித்த வெற்று வாக்குறுதி ரூபாய் 15000/- ல் 
பாதி (7500/-) கூட இல்லாத போது இதை எப்படி தொழிற்சங்கங்கள் மறுபரிசீலனை செய்யமுடியும்?

     ஒப்பந்த ஊழியர்களுக்கு  சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கவேண்டும் என்று இருந்தாலும், குறைந்த பட்ச ஊதியம் வழங்குவது குறித்து அரசு உறுதி எதையும் வழங்கவில்லை. நிரந்தர ஊழியர்கள் போலவே ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கவேண்டும் என்பது, 2011இல் நடைபெற்ற 43வது இந்திய தொழிலாளர் மாநாட்டிலும் 2015 இல் நடைபெற்ற 46வது இந்திய தொழிலாளர் மாநாட்டிலும், மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு  இறுதி செய்யப்பட்டது. மிக உயர்ந்த அமைப்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவுகளைக் கூட அரசாங்கம்  ஏற்றுக் கொள்ளத்தயாராகவில்லை.

     தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் 70%மான  தொழிலாளிகளை வெளியேற்றுவதற்கும்,    அவர்களுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பை நீக்குவதற்குமே  பயன்படும்.
பல மாநில அரசுகளும் இதை போன்ற கடும் நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகளில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இறுதிமுடிவெடுக்கபடும் என்று அரசு கூறியிருந்தது. தொழிலாளருக்கு எதிரான சட்டதிருத்தங்களுக்கு  ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க கூடாதென்று தொழிற்சங்ககள் கேட்டுக்கொண்டுள்ளது. அரசினுடைய தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு பெருமுதலாளிகளுடைய வலுவான ஆதரவு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் உரிமை இல்லாத, சமூக பாதுகாப்பற்ற, குறைந்தபட்ச ஊதியமற்ற, தொழிலாளிகளை அடிமையாக்கும் சட்டதிருத்தங்களை தொழிற்சங்கங்கள் எப்படி ஏற்றுகொள்ளமுடியும்.

          45 மற்றும் 46 வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் போன்ற "திட்ட ஊழியர்களை" அங்கீகரித்து, அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி மற்றும் சலுகைகளை அமுல்படுத்த ஏகமனதான பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மேலும் அவர்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி வெட்டி சுருக்கபடுகிறது.

         
          போனஸ் பிரச்சனைகளில், போனஸ் பெறுவதற்கான ஊதிய உச்சவரம்பு ரூபாய் 10000 /- என்பதை ரூபாய் 21000 /- ஆக  உயர்த்தவும்,
போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பு ரூபாய் 3500/-  என்பதை  ரூபாய் 7000/- ஆக உயர்த்தவும் பரிசீலிபதாகவும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது . தொழிற்சங்கங்களை பொறுத்தவரையில் லாபம் பெறுவதற்கு உச்சவரம்பு இல்லாதபோது போனஸ் பெறுவதற்கான அனைத்து உச்சவரம்புகளையும்  நீக்கவேண்டும். அதேபோல் பணிக் கொடை கணக்கிடுவதற்கான முறையை உயர்த்தி, பணிக் கொடைக்கான உச்சவரம்புகளையும்  நீக்கவேண்டும். இதையெல்லாம் மத்திய அரசு மறுக்கிறது.

           சாதாரண மக்களுக்கு தேவைப்படும்  அத்தியாவசிய பொருட்களுடைய விலைவாசி குறைந்துள்ளதாக அரசு கூறுவது உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை. ஊக வாணிபத்தை (ONLINE-TRADING-வர்த்தகம் ) தடைசெய் என்று  நாடு முழுதும் பொது விநியோக முறையை பலபடுத்தவேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கபட்டுள்ளது.

      நாட்டினுடைய பொருளாதாரத்தை பலப் படுத்துவதிலும், வளப்படுத்துவதிலும், முக்கிய பங்காற்றும் பொதுத்  துறை நிருவனங்களின்  பங்குகளை விற்பனை செய்யவேண்டாம்  என்கின்ற தொழிற்சங்க கோரிக்கை நிராகரிக்கப் படுகின்றது. அதே போல் பாதுகாப்பு, ரயில்வே, நிதித்துறைகளில் அந்நிய நேரடி மூலதனம் (FDI ) கூடாது என்பதையும் அரசு மறுக்கின்றது. மேலும் மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் போன்ற துறைகளிலும் கண்மூடித்தனமான தனியார்மயம் தொடர்கிறது.

      மேலே குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளில் அரசினுடைய இந்த தவறான நிலைபாட்டை ஏற்று  எந்த ஒரு நியாயமான தொழிற்சங்கமும் வேலை நிறுத்தத்தை கைவிடமுடியாது.

      எனவே"2015 செப்டம்பர் 2" வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கான எந்த நியாயமான காரணமும் இல்லை. மாறாக எந்த ஊசலாட்டத்திற்கும் இடமின்றி "2015 செப்டம்பர் 2" வேலை நிறுத்தத்தை அனைத்து பகுதிகளிலும் உறுதியுடன் நடத்திட முன்னேறிச் செல்வோம். 
          
         மத்திய அரசினுடைய தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்க சங்க வித்தியாசமின்றி "2015 செப்டம்பர் 2"  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட அனைத்து மத்திய தொழிற்சங்ககள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

         தோழர்.தபன்சென் 
பொதுச்செயலாளர் 
இந்திய தொழிற்சங்க மையம். 

TRANSLATED BY NFPE - COC
 TAMIL NADU CIRCLE 
===============

No comments:

Post a Comment