26.03.2015 ONE DAY STRIKE News Flash

Wednesday, May 6, 2015

NFPE-P4

மாநில செயற்குழு கூட்டம் 
02.05.2015 மற்றும் 03.05.2015, சேலம் 

தோழர்களே!
                          நமது மாநில செயற்குழு கூட்டம் 2,3-05.2015 இரண்டு தினங்களும் சேலம் மாநகரில் வெகு சிறப்பாக நடை பெற்றது. 


                          முதல் நிகழ்ச்சியாக விண்ணதிர கோசங்கள் முழங்க  தேசிய கொடியை முன்னாள் மாநில செயலாளர் தோழர் K.சிவராமன் அவர்கள் ஏற்றி வைத்தார். 


சம்மேளன கொடியை NFPE உதவி மா பொது செயலாளர் தோழர் S.ரகுபதி அவர்கள் ஏற்றி வைத்தார். 

நமது தபால்காரர் சங்க கொடியை நமது அகல இந்திய பொது செயலாளர் தோழர் R.சீதாலக்ஷ்மி அவர்கள் ஏற்றி வைத்தார். 


                        கூட்டத்திற்கு தோழர் S.போஸ் மாநில உதவி தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். 

தோழர் R.பழனிசாமி மேற்கு மண்டல செயலாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 

தோழர் S.ரகுபதி உதவி மா பொது செயலாளர் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். 


                        மாநில தலைவர் தோழர் N.ஜெயராஜன் ஓய்வு பெற்ற காரணத்தினாலும், மாநில உதவி தலைவர் தோழர் துரைபாபு மற்றும் 
மாநில உதவி செயலாளர் தோழர் R.பழனிசாமி அவர்களும் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினாலும் மூன்று பதவிகளும் போட்டி இன்றி 
நிரப்பப்பட்டது. தேர்வை மாநில உதவி தலைவர் தோழர் S.போஸ் அவர்கள் நடத்தி வைத்தார். 

                        புதிய மாநில தலைவராக தோழர் M.பன்னீர்செல்வம் C O பாண்டிச்சேரி அவர்களும், மாநில உதவி தலைவராக தோழர் S.மணி MO கிரிஷ்ணகிரி அவர்களும், மாநில உதவி செயலாளராக தோழர் H.ஸ்ரீதரன் 
C O கோயம்பத்தூர் அவர்களும் பலத்த கரவோசங்களுக்கிடையே ஏக மனதாக தேர்வு செய்யப் பட்டார்கள். 


                        பின்பு  நமது அகில இந்திய பொது செயலாளர் தோழர் R.சீதாலக்ஷ்மி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அத்துடன் மதிய உணவுக்காக 2.00 மணிக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது. 


                         மீண்டும் மதியம் 3.00 மணிக்கு செயற்குழு தொடங்கியது. இந்த 
அவைக்கு புதிய மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை வகித்தார்கள். 



தோழர் N.ஜெயராஜன் மாநில தலைவர் ஓய்வு பெற்றதால் அவரை பாராட்டி தோழர் M.B.சுகுமார் முன்னாள் R3 மாநில செயலாளர், தோழர் S.கருணாநிதி முன்னாள் JCM உறுப்பினர், தோழர் D.சிவகுருநாதன் மாநில தலைவர் கேசுவல் லேபர் சங்கம் மற்றும் தோழர் S.ரகுபதி உதவி மா பொது செயலாளர் ஆகியோர் வாழ்த்தி கௌரவித்தார்கள்.

             
        
                      அடுத்ததாக செயற்குழுவில் வைக்கப்பட்ட பொருள்கள் பற்றி மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் விளக்க உரையாற்றி அனுமதி பெற்றார். பின் அனைத்து கோட்ட, கிளை செயலாளர்களும் பொருளின் மீது விவாதம் நடத்தினர். மாநில செயலர் மற்றும் அகில இந்திய செயலாளர் இருவரும் தொகுத்து உரையாற்றினர். 

                       பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
தீர்மானங்கள்
1. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தபால்காரர்கள் மற்றும் ஊழியர்கள் 
     வேலை செய்வதில்லை..

2. தபால்காரர்களுக்கு பணி நேரம் 6 மணி நேரமாக மாற்றி அமைக்கப் பட வேண்டும் ...
   
மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிற தீர்மானங்கள் பின்னால்    பதிவு செய்யப்படும்.  

                      இறுதியாக தோழர் S.ஜோதிமணி சென்னை மண்டல செயலாளர்  அவர்கள் நன்றி கூறினார். முதல் நாள் செயற்குழு இனிதே நிறைவடைந்தது. 

இரண்டாவது நாள் செயற்குழு மற்றும் தோழர் N.ஜெயராஜன் மாநில தலைவர் பணி ஓய்வு பாராட்டு நிகழ்சிகள் பின்னர் பிரசுரிக்கப்படும்.

நிகழ்ச்சிகள் சில ...




































No comments:

Post a Comment