26.03.2015 ONE DAY STRIKE News Flash

Monday, April 13, 2015

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் ஜாலியன்வாலாபக் படுகொலையில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கும் வீரவணக்கம்!!!



வரலாற்றில் இதே ஏப்ரல் மாதம் 13ம் நாள்தான் (1919ம் ஆண்டு) சிவப்பு சரித்திரமான ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றது. அறுவடை விழாவைக் கொண்டாட பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். எல்லா பக்கத்திலும் பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்ட அந்த மைதானத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாக திரண்டிருந்த நிலையில் தனது படையினருடனும், ஆயுதங்களுடன் நுழைந்த ஜெனரல் டையர்... அந்த மைதானத்தில் இருந்து வெளியேறும் அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டு அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டான். தங்களிடம் இருந்த தோட்டாக்கள் அனைத்தும் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஆயுதங்கள் ஏதுமின்றி குழந்தைகளும், பெண்களும், பெரியோர்களுமாக திரண்டிருந்த மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தில் 1,700 பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் சுமார் 3,000க்கும் மேல். தப்பிப் பிழைத்திட தறிகெட்டு ஓடிய நூற்றுக்கணக்கானோர் மைதானத்தின் ஓரத்தில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரை விட்டனர்.
96 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அந்த மைதானத்தின் சுற்றுச் சுவர்களில் தோட்டாக்கள் பதிந்த வடுக்கள் ஆறாத ரணமாய் உள்ளது. மைதானத்தின் இடது ஓரத்தில் முன்பு 120 மனித சடலங்களை உள்வாங்கிய அந்த பாழும் கிணறு மௌன சாட்சியாய் இன்னமும் நிற்கிறது.
இதுபோன்ற கணக்கிலடங்கா உயிர்ப்பலிகளும், தியாகங்களும் நிறைந்ததுதான் நமது இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாறு.

No comments:

Post a Comment