26.03.2015 ONE DAY STRIKE News Flash

Monday, March 9, 2015



                               NFPE -P4
                                                                 
                                                                   10.03.2015
தமிழக அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்த                                             அறிவிப்பு. 
                அலை கடலென ஆர்ப்பரித்து வாரீர்...

தோழர்களே!
தமிழ்நாடு NFPE இணைப்புக்குழு (COC) தமிழகம் தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தம் 26.03.2015 அன்று நடத்துவது என முடிவெடுத்து உள்ளது. 
அதன் முதல் கட்டமாக 10.03.2015 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தி சென்னை மாநில அஞ்சல் நிர்வாகத்திடம்  வேலைநிறுத்த அறிவிப்பு கடிதத்தை சமர்பிப்பது என முடிவு செய்துள்ளது.
ஆகவே சென்னை தோழர்கள் அனைவரும் 10.3.15 மதியம் 1.00 மணியளவில் 
அண்ணா ரோடு அலுவலகம் நோக்கி ஆர்ப்பரித்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம். 

10.03.15 ஆர்ப்பாட்டத்திற்கு தபால்காரர் மற்றும் MTS ஊழியர்களை பெரும்திரளாக அணிவகுத்து வருமாறு அஞ்சல்  நான்கின் மாநிலசெயலாளர் 
தோழர் G.கண்ணன் அவர்களும் சென்னை நகர  மண்டல செயலாளர் தோழர் 
S.ஜோதிமணி அவர்களும் சென்னையில் அனைத்து அலுவலகங்களுக்கும் 
சென்று NFPE கோட்ட சங்க நிர்வாகிகளையும், தபால்காரர் MTS ஊழியர்களையும்  நேரடியாக சந்தித்து உரையாற்றினர்.
வேலைநிறுத்தத்தின் அவசியம் பற்றியும் நமது கோரிக்கைகள் பற்றியும் 
எடுத்துரைத்தனர். அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். வேலைநிறுத்தம் தேவை என்று உற்சாகம் கொண்டனர்.

NFPE அஞ்சல் நான்கின் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்களும்  சென்னை நகர மண்டல செயலாளர் தோழர் S.ஜோதிமணி அவர்களும்  09.3.2015 காலை 8.00 மணிக்கு புறப்பட்டு சென்னை GPO, அண்ணாரோடு HPO, திருவல்லிக்கேணி HPO, ராயப்பேட்டை , தேனாம்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், தி.நகர் HPO ஆகிய அலுவலகங்களுக்கு முதல் சுற்று வேலைநிறுத்த பிரச்சாரம் சென்று வந்தனர். 

வேலைநிறுத்த போராட்டம் வெல்லும் ... 




No comments:

Post a Comment